No menu items!

க்யூஆர் குறியீடு மோசடி – மாணவர்கள் பெற்றோர்கள் ஜாக்கிரதை

க்யூஆர் குறியீடு மோசடி – மாணவர்கள் பெற்றோர்கள் ஜாக்கிரதை

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் நடக்கும் க்யூஆர் குறியீடு மோசடி. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களே இலக்காகிறார்கள்.

மோசடியாளர்கள், கல்வி உதவித்தொகை வழங்கும் துறையின் அல்லது அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் போல் ஏமாற்றி மாணவர்களின் அல்லது அவர்களது பெற்றோரின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்கிறார்கள்.

பள்ளிகள் அல்லது கல்லூரிகள் மூலம் தொலைபேசி எண் கிடைத்ததாகவும், உங்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

அவர்கள் சொல்வதை உண்மை என நம்புவோரிடம் பல தகவல்கள் பெறப்படுகிறது. பள்ளி மற்றும் குடும்பம் தொடர்பான விவரங்கள் சரிபார்க்கப்படுவதாக அவர்கள் கூறுவதை உண்மை என நம்புகிறார்கள் மக்கள்.

பிறகுதான், வாட்ஸ்ஆப் மூலம், க்யூஆர் குறியீடு ஒன்றை அனுப்பி அதனை ஸ்கேன் செய்யுமாறு கூறுகிறார்கள். அதனை ஸ்கேன் செய்து, விவரங்களைப் பதிவு செய்ததும், உதவித் தொகை வழங்கப்படும் என்பார்கள். க்யூஆர் குறியீடு ஸ்கேன் செய்தால் பெரிதாக என்ன நடந்து விடப்போகிறது என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப உலகில், என்னவெல்லாமோ செய்யலாம் என்கிறார்கள் சைபர் துறை நிபுணர்கள்.

ஒருவேளை, மோசடியாளர்கள் சொல்லும் பொய் வார்த்தைகளை நம்பி ஏமாந்து, ஸ்கேன் செய்தால், அந்த செல்போன் எண்ணிலிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

பணப்பரிமாற்றம் குறித்து அறிந்தபிறகுதான், ஒருவர், கல்வி உதவித் தொகை பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே அறிவார்கள். உடனடியாக இது குறித்து புகார் செய்தால், இழந்த பணத்தை மீட்க முடியும் என்கிறார்கள் சைபர் பிரிவு காவல்துறையினர்.

அறிய வேண்டியது என்னவென்றால், ஒரு கல்வி உதவித் தொகைக்கு நாமாக விண்ணப்பிக்காமல், உதவித் தொகை வழங்கும் அமைப்பு நம்மைக் கூப்பிட்டு உதவி செய்வது நடைமுறையே இல்லை. எனவே, எந்தவொரு கல்வி உதவித் தொகையும் தொலைபேசியில் அழைத்து வழங்கப்படுவதில்லை. இதுபோலவேதான், மருத்துவ காப்பீடு என்று கூறியும் சிலர் தொலைபேசியில் அழைத்து ஏமாற்றுகிறார்கள்.

எனவே, அடையாளம் தெரியாத எந்த ஒரு அமைப்பிடமிருந்தும் வரும் தகவல்களை உறுதி செய்யாமல் மேற்கொண்டு அவர்களிடம் பேச வேண்டாம்.

கல்வி உதவித் தொகை என்று சொன்னால், அவர்கள் கல்வி உதவித் தொகை அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது, பதிவு செய்யப்பட்டதா? உரிமையாளர் பெயர் என்ன? இணையதளப் பக்கம் இருக்கிறதா? என்பது போன்ற தகவல்களை நீங்களே கேட்கலாம். இவற்றையெல்லாம் கேட்டாலே, ஒருவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு மோசடியாளர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

மக்கள் செய்ய வேண்டியது

  1. நம்பகமற்ற மற்றும் முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்.
  2. உதவித் தொகை வாய்ப்புகளை நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது நம்பகமான அமைப்புகளுடன் சரிபார்க்கவும்.
  3. தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம்.
  4. உங்கள் வங்கி மற்றும் ஆன்லைன் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...