No menu items!

சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி; தொழில் பிச்சை எடுப்பது

சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி; தொழில் பிச்சை எடுப்பது

ஒருவர் பணக்காரராக என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

சிறுவயதில் நன்றாக படிக்க வேண்டும்… நேரம்காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும்… திட்டமிட்டு முதலீடுகளைச் செய்ய வேண்டும்… சிக்கனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பல பதில்களை யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா?

ஆனால் இதில் எதையும் செய்யாமலேயே 7.5 கோடி ரூபாயைச் சேர்த்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த பரத் ஜெயின். அவர் செய்யும் தொழில் பிச்சையெடுப்பது. பிச்சையெடுப்பதன் மூலம் மட்டுமே இத்தனை கோடிகளை சம்பாதித்துள்ள பரத் ஜெயின், உலகின் நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

வறுமை காரணமாக சிறு வயதில் படிப்பைத் தொடர முடியாத பரத் ஜெயின், கால ஓட்டத்தில் பிச்சைக்காரராக மாறி இருக்கிறார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் ஆகியவைதான் பரத் ஜெயின் பிச்சையெடுக்கும் இடங்கள். அங்கு வரும் மக்கள், தாராளப் பிரபுவாக மாறி தனக்கு கொடுத்த சில்லறைகளைச் சேர்த்துதான் இன்று 7.5 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை கட்டி அமைத்துள்ளார் பரத் ஜெயின்.

மும்பையில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 வீடுகள், சொந்தமாக 2 கடைகள் (அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார் பரத் ஜெயின்) என்று சொத்துப் பட்டியல் நீள்கிறது. பரத் ஜெயினின் குடும்பம் பரேலில் உள்ள ஒரு பிளாட்டில் குடியிருக்கிறது. அவரது குடும்பத்தினர் சொந்தமாக ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்த, குழந்தைகள் கான்வெண்டில் படிக்கிறார்கள். குடும்பத்தினருக்கு அவர் பிச்சை எடுப்பது பிடிக்கவில்லை.

இத்தனை சொத்துகள் இருந்தாலும், இனி பிச்சை எடுக்க வேண்டாம் என்று உறவினர்கள் கேட்டுக்கொண்டாலும் பிச்சை எடுக்கும் தொழிலை விடாமல் இருக்கிறார் பரத் ஜெயின். இதுபற்றி கேட்டால் காசு பணம் சேர்ந்துவிட்டது என்பதற்காக மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் தொழிலை விட முடியுமா என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...