No menu items!

மும்பையில் சொத்து – கோடிகளை செலவழிக்கும் நட்சத்திரங்கள்!

மும்பையில் சொத்து – கோடிகளை செலவழிக்கும் நட்சத்திரங்கள்!

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் அங்குள்ள நட்சத்திரங்களின் கனவாக இருப்பது மும்பை பாந்த்ரா, ஜூகு கடற்கரை பகுதியில் ஒரு வீடு வாங்குவதுதான். அந்தளவுக்கு முக்கியமான ஒரு இடமாக பாந்த்ரா பகுதி இருக்கிறது. இன்னும் சிலர் அங்கு வீடு வாங்கி வைத்து விட்டு அதை வாடகைக்கு விட்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது. இங்குதான் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் புதிய வீடு வாங்கியிருகிறார்கள்.

கத்ரினா கைப், விக்கி கவுசல் ஆகியோர் அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று தளங்களை வாங்கி ஒரே வீடாக்கியிருக்கிறார்கள். இதே போல மலைக்கா அரோரா, அர்ஜீன் கபூர் ஆகியோர் புதிய வீடு ஒன்றை சில வாங்களுக்கு முன் வாங்கியிருக்கிறார்கள். இந்த வீட்டை மலைக்கா பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவருக்கு சமீபத்தில் வாடகைக்கு விட்டிருக்கிறார். மாதம் 1.5 லட்சம் வாடகை இதன் மூலம் அவருக்கு கிடைக்கும். இதை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் வாடகை ஒரு பக்கம் இருக்க அடுக்கு மாடி குடியிருப்பை பாதுகாக்க வைப்புத்தொகையாக 5 லட்சத்தையும் செலுத்த வேண்டும் என்ற விதி முறை இருக்கிறது. இந்த வைப்புத்தொகை உறுதியான பிறகுதான் வாடகை ஒப்பந்தம் போடப்படுகிறது.

இதே பகுதியில் மலைக்கா வாங்கிய ஒரு வீட்டை சரியான நேரத்தில் ஒப்படைக்க வில்லையெனக்கூறி மலைக்கா சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். அது பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

கார்த்திக் ஆர்யன், சாரா அலிகான், ஆலியாபட் மனோஜ் பாஜ்பாய், அஜய் தேவ்கன் ஆகியோரும் வீடு வாங்கியுள்ளனர். இங்கு குறைந்தபட்சமாக ஒன்றரை கோடி விலை மதிப்புடையது. அமிதாப்பச்சன் இங்கு வாங்கிய 7 கோடி மதிப்புடைய ஒரு வீட்டை தனது மகள் ஸ்வேதாவுக்கு பரிசாக கொடுத்தார். ஜெயா பச்சனுக்கு 31 கோடி மதிப்புடைய பங்களா ஒன்றும் இருக்கிறது. இந்த சொத்த வாங்குவதற்கு முன்பு அமிதாபிற்கு 7 ஆயிரத்து 250 சதுர அடி ப்ளாட் ஒன்று வைத்திருந்தார். இதன் மதிப்பு மட்டுமே 19 கோடிக்கும் அதிகமான மதிப்புடையது.

பிரியங்கா சோப்ரா இங்கு இருந்த தனது இரண்டு பிரமாண்டமான வீட்டை 2 ஆயிரத்து 292 சதுர அடி வீட்டை 6 கோடிக்கு விற்று விட்டார் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்யும் பிரியங்காவின் இரண்டு பெண்ட் ஹவுஸ் அந்தப் ப்குதியில் பிரபலமானது. மும்பையின் இன்னொரு பகுதியில் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷ்ரா ஹாசன் 15 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2 ஆயிரத்து 232 சதுர அடி பரப்பளவு உள்ளது. மூன்று கார்கள் நிறுத்தும் இடத்தையும் சேர்த்து உள்ளடக்கியது.

அஜய் தேவ்கன் அலுவலகம் மற்றும் வீடு ஆகியவை சேர்த்து 16 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு பகுதிய வாங்கியிருக்கி்றார். இப்படி நட்சத்திரங்கள் வாங்கும் புதிய வீடுகளின் விபரங்களை மீடியாக்கள் கண்டுபிடித்து எழுதி விடுகிறார்கள். இங்கு வீடு வாங்கும் நட்சத்திரங்களில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் புதிய்தாக சேர்ந்திருக்கிறாரக்ள் என்பதுதான் ஆச்சரியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...