திரையுலகில் எழுப்படுப்படும் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பக்கமிருந்தும் நடிகைகள் தாங்கள் சந்தித்த பல மோசமான சம்பவங்களை ஊடகங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகாவும் தனக்கும் மலையாள சினிமாவில் நடந்த மோசமான அனுபவத்தை சமீபத்தில் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது,
ஒருமுறை மலையாள பட ஷூட்டிங்கில் இருக்கும்போது சில ஆண்கள் கும்பலாக அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக நடந்து செல்லும்போது என்ன செய்கிறார்கள் என பார்த்தேன். வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே அங்கிருந்த தமிழ் ஆள் ஒருத்தரை கூப்பிட்டு என்ன செய்கிறார்கள் என கேட்டேன். எல்லா நடிகைகளோட கேரவன்ல துணி மாத்துற வீடியோ வச்சிருக்காங்க. எந்த நடிகை பேரு சொன்னாலும் அதுல இருக்குனு சொன்னாரு. அதைக்கேட்டவுடன் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. அந்த சம்பவத்துக்கு பின் எனக்கு தெரிஞ்ச எல்லா நடிகைகளிடமும், கேரவன் உள்ள போகும்போது ஜாக்கிரதையா போங்கனு நான் சொன்னேன். கேரவன் இல்லாத காலகட்டத்திலேயே நான் நடிச்சிருக்கேன். அந்த காலத்தில் எல்லாம் மரத்துக்கு பின்னாடி துணி கட்டிலாம் டிரெஸ் மாத்தி இருக்கிறோம். டாய்லட்லாம் அப்போ இருக்காது. இப்போ கேரவன் வந்திருப்பது ஒரு நல்ல விஷயம்னு நினைக்கும்போது, அதுக்குள்ளயே பாதுகாப்பு இல்லைனு சொல்லும்போது ஷாக்கிங்கா இருந்தது.
இன்று சில நடிகைகள் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியும். எனக்கும் இதுபோன்று நடந்திருக்கிறது. பெரிய பெரிய அரசியல்வாதி, அவங்க பேரெல்லாம் நான் சொல்ல விரும்பல. இப்போ அவங்க பேரை சொல்லி அசிங்கப்படுத்தனும்னு எனக்கு நோக்கமில்லை. அவங்கெல்லாம் யார் யார்னு எனக்கு தெரியும் என்று பேசியிருக்கிறார். ராதிகாவின் இந்த பேச்சு பலரையும் ஷாக் ஆக்கியிருக்கிறது.
ராதிகா என்றால் துணிச்சலுக்கு பெயர் போனவர் என்ற பிம்பம் இருக்கிறது. தனி மனுஷியாக திரையுலகிலும், சின்னத்திரை வட்டத்திலும் தனது முத்திரையை பதித்தவர் அவருக்கே இந்த சூழல் இருந்திருக்கிறது.
அவர் கூறிய நடிகைகள் சிலர் தங்களுக்கு அது நடக்கவில்லை என்று சொன்னாலும் அவர்களும் இந்த செக்ஸ் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் பேசிய இன்னும் சிலர் நாங்கள் வாய் திறந்தால் எங்களுக்கு சினிமாவிலும், சின்னத்திரையிலும் வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள் என்று ஒரே குரலில் சொல்கிறார்கள்.
இது குறித்து ஊர்வசி பேசும்போது, சினிமாவில் நடித்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் வருகிறார்கள். அவர்களை நம்பி குடும்பத்தில் பல பேர் இருப்பார்கள் இதனால் அவர்களுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்படும். அதில் சிலர் பழி ஆகிறார்கள். இதில் அவர்களின் நிலைக்காக பரிதாபப்படவேண்டும் என்று பேசியிருக்கிறார்.
எப்படியோ இதுவரை சிறிய அளவிலான நடிகைகள் தங்களுக்கு நடந்த விஷயங்களை பேசியிருந்த நிலையில் ராதிகா, ஊர்வசி, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளும் களம் இறங்கியிருப்பது நிலைமையை இன்னும் சூடாக்கியிருக்கிறது.