ஒரே ஒரு ஓட்டு காரணமாக மிகப்பெரிய அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் தோல்வியடைய மீண்டும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை. கூடவே குடும்ப ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது 3 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க 3 சகோதரர்களை தேடும் கதையையும் அதற்கு ஒரு வித்தியாசமான லாஜிக்கையும் இயக்குநர் வைத்திருக்கிறார். தனது தங்கைகள் காதலிக்கும் மாப்பிள்ளைகளை தனது வீட்டுக்கே வரவழைத்து அவர்களோடு பழகி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், அப்போது நடக்கும் காமெடி கலாட்டாவும் ரசிக்கும்படி இருக்கிறது.
இதற்கிடையில் சித்தப்பா பெரியப்பா கட்சியை எப்படியெல்லாம் ஆட்டி வைத்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காட்சிகளுக்கு எந்தவித வலுவான காரணமும் சொல்லபடாத திரைக்கதையால் படம் கிழிந்து தொங்குகிறது. இயக்குனர் சாய் ராஜகோபாலின் அரசியல் நையாண்டியுடன் கூட்டிய கதையை மட்டும் கவுண்டமணியிடம் சொல்லி விட்டு பழைய சிவாஜி படமான கலாட்டா கல்யாணத்தின் கதையை உல்டாவாக எடுக்க முடியற்சி செய்திருக்கிறார் ஆனால் அவருக்கு திரைக்கதை கைவரவில்லை. இதனால் படம் முழுவதும் பெரிய நட்சத்திரங்கள் இருந்துமே எப்போது படம் முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்க முத்து அவரது மகன் வாசன் கார்த்திக், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் படம் முழுவதும் வந்து கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை விறூவிறுப்பாக எவ்வளோ முயன்றாலும் முயன்றாலும் திரைக்கதையில் சுவாரஸயம் இல்லாததால் தோல்வியில் முடிந்திருக்கிறது. யோகிபாபுவை அடித்து நடிப்பதிலேயே கவுண்டமணி கவனம் செலுத்தியிருக்கிறார். சிங்க முத்து வந்தவுடன் படம் வேகமெசுக்கும் என்று நினைத்தால் அதன் பிறகும் தொய்வு அடைகிறது. சில காட்சிகளில் ரசிக்க வைத்தாலும் படம் முழுவதிலும் பெண்கள் கூட்டமும் டபுள் மீனிங் காட்சிகளௌம் படத்தின் சீரியஸ் தன்மையை கெடுக்கிறது.
நல்ல அழுத்தமான கதையிலும், திரைக்கதையிலும் நடிக்க கவுண்டமணி கவனம் செலுத்த வேண்டும்.
ஒத்த ஓட்டு முத்தையா – கள்ள ஓட்டு