No menu items!

மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ம், வணிக சிலிண்டர் விலை ரூ.350.50ம் அதிகரிக்கப்படுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1118.50 காசுகள்.
அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது


தாடியை டிரிம் செய்து ‘நியூலுக்’க்கில் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். இந்த பாதயாத்திரையின்போது தனது தலைமுடியை வெட்டாமலும், தாடியை ஷேவ் செய்யாமலும் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தி தற்போது புது லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது மிகவும் வயதான தோற்றத்தில் தாடி, நரைமுடியுடன் இருந்த ராகுல்காந்தி தற்போது புது லுக்கிற்கு மாறியுள்ளார்.

தான் படித்த பல்கலைக்கழகமான இங்கிலாந்து தலைநகர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி நாளை விரிவுரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்ட்ன் சென்றுள்ளார். 21-ம் நுற்றாண்டை கேட்க கற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ராகுல் காந்தி நியூ லுக்குக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.


ஆஸ்திரேலிய ரயில் நிலையத்தில் தமிழர் சுட்டுக் கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளரை கத்தியால் குத்தினார்.

இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது. தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...