No menu items!

நியூஸ் அப்டேட்: டெல்லியில் போராட்டம் – ராகுல், பிரியங்கா கைது

நியூஸ் அப்டேட்: டெல்லியில் போராட்டம் – ராகுல், பிரியங்கா கைது

விலைவாசி உயர்வைக் கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தின்போது போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸாரின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கால்நடைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் ஆதி திராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த நவீன வேளாண்மை மற்றும் நீர் நிலைகள் மறு சீரமைப்பு திட்டம் முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராகவும் இருந்த கார்த்திக் கால்நடைத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதி திராவிடர் நலத்துறை இயக்குநராக இருந்த மதுமதி சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வரும் 7-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது ஓபிஎஸ் தரப்பு

நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குகளின் விசாரணை தொடங்கியது. அப்போது, நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது. வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனுவை வாபஸ் பெற, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தினார். நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வாதிட விரும்புவதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து கருத்தை அறிந்து தெரிவிப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று சந்தித்து பேசினார். தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் மதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...