அதிமுக பொதுக் குழு தீர்ப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான், அவர்களைத்தான் அழைக்கிறா். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப் பற்றியும் கவலையில்லை. அவருக்கு உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும். திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்.ஸுக்கு இருந்தால் அதை அவர் பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே” என்று இபிஎஸ் கூறினார்.
அரும்பாக்கம் வங்கி கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3½ கிலோ தங்கம் மீட்பு
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், கொள்யைடிக்கப்பட்ட நகைகளில் 3½ கிலோ நகைகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரிடம் சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து நகைகளை வாங்கி தனது வீட்டில் இன்ஸ்பெக்டர் பதுக்கி வைத்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பஸ்களில் பெண்களை ஆண்கள் முறைத்துப் பார்க்க கூடாது: புதிய விதி
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, “பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம். நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது” என பல்வேறு அறிவுறுத்தல்கள் நடத்துநடர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு ரூ 13. லட்சம் பரிசு – ரஷியா அறிவிப்பு
ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறுபவர்களுக்கு ரூ. 13 லட்சம் பரிசுத் தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
இது குறித்து, “ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷிய பெண்களுக்கு, சோவியத் சகாப்த (தாய் நாயகி) விருது வழங்கி, 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இது உக்ரைனில் நடந்த போரினால் மரணமடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும்” என கூறியுள்ளார்.