No menu items!

தமிழர்களிடம் சுருண்ட நியூஸிலாந்து அணி

தமிழர்களிடம் சுருண்ட நியூஸிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால், அதில் ஆடிய இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பதிலாக சுப்மான் கில், ஆகாஅஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸை வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதைத்தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதமும், டெவன் கான்வேயும் களம் இறங்கினர். 15 ரன்களை எடுத்திருந்த நிலையில் டாம் லாதம் அஸ்வினின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து டெவன் கான்வேயுடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். ஆனால் அவரும் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா சிறப்பாக ஆட, நியூஸிலாந்து அணி ரன்களைக் குவிக்கத் தொடங்கியது.

ஆனால் டெவன் கான்வே (76 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா (65 ரன்கள்) ஆகியோர் அவுட் ஆன பிறகு நியூஸிலாந்து அணி ஆட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களில் வலுவாக இருந்த நியூஸிலாந்து அணி, சடாரென்று விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தின் பந்துவீச்சை நியூஸிலாந்து வீர்ர்களால் சமாளிக்க முடியவில்லை.

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து அணி, 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இவர்கள் இருவரும் தமிழக வீர்ர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ஆடவந்த இந்திய அணி ஆட்டநேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த நிலையில், கில் 10 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...