சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சின்னத்திரையில் 25 வருட கால அனுபவமுள்ளவர் நேத்ரன். பாக்கியலஷ்மி, பொன்னி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பாய்ஸ் VS கேர்ல்ஸ் சீசன் 2, சூப்பர் குடும்பம் ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது மனைவி தீபாவும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகள் ‘சிங்கப்பெண்ணே’ என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். நேத்ரன் நடன கலைஞராகவும் அறியப்படுபவர். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதுகுறித்து நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மகள் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
47 வயதான நேத்ரன், ‘மருதாணி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது ‘பாக்கியலட்சுமி’ தொடரிலும் நடித்து வந்தார்.
கடந்த ஆறு மாதங்களாக தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் நேத்ரனின் மகள் காணொளி மூலம் அண்மையில் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேத்ரன் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும், நெகடிவ் ஷேட் பொருந்தியவையாகவும், வில்லத்தனம் நிறைந்ததாகவும் இருக்கும். ஒரு சில, பிரபல ஹீரோக்களின் திரைப்படங்களில் இவர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரியாலிட்டு ஷோக்கள் மற்றும் பிற சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனது முகத்தினை பதியவைத்து கொண்டே இருந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான, மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு ஜோடி நம்பர் 1 சீசன் 3 மற்றும் 5லும் பங்கேற்று இருக்கிறார். அதே போல, மிஸ்டர் அண்ட் மிஸ்சர்ஸ் சின்னத்திரை கில்லாடீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இவர், தொடர்ந்து சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.