பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் நாகேஷின் பேரன் கஜேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் உருட்டு உருட்டு. இதில் ஹீரோயின் ரித்விகா ஸ்ரேயா. முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, பாவா லட்சுமணன் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவானாலும், இந்த படத்தின் கரு கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக காரணம் என்ன என்பதை சொல்கிறது. இது குறித்து இயக்குனர் கூறியது
அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான முழுக்க முழுக்க காமெடி படமாக இந்த கரு உருவாகி உள்ளது.
25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது, அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது, ஆனால் தற்போது அந்த விளம்பரங்கள் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அதற்கு பதிலாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? எங்கள் மருத்துவமனைக்கு வாங்க என்று அனைத்து மாவட்டத்திலும் உள்ள நகராட்சி, ஊராட்சி என எல்லா இடங்களிலும் கருத்தரிப்பு மைய விளம்பரங்களை மட்டுமே காண முடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் சொல்கிறோம். ” மூணு பொண்டாட்டி முனுசாமி ” கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் இசையில் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.