No menu items!

‘ஏ’ படத்தில் நடித்த என் அப்பா !

‘ஏ’ படத்தில் நடித்த என் அப்பா !

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்த படம் ‘பெருசு’. மார்ச் 14ல் ரிலீஸ்

சென்னையில் நடந்த இந்த பட விழாவில் இயக்குனரும், இந்த பட தயாரிப்பாளருமான கார்த்திக்சுப்புராஜ் பேசியது:

‘‘இலங்கையை சேர்ந்த இளங்கோ ராம் ஒரு படம் பண்ணியிருக்கிறார். சிங்களத்தில் உருவான அந்த படம் பல திரைப்படவிழாக்களில் பேசப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். சில்ரன் ஆப் ஹெவன் மாதிரியான படமாக இருக்கும் என்று நினைத்து, நாங்கள் அந்த படத்தை பார்த்தோம். ஆனால், ஆரம்பம் முதலே ஷாக். காரணம். அது ஒரு அடல்ட் காமெடிபடம். அதேசமயம், படம் பார்த்து என்ஜாய் செய்தோம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குனர் இளங்கோராம் விரும்பினார்.

இந்த கதையை தமிழுக்கு தக்கப்படி மாற்ற தகுந்த எழுத்தாளர் தேவை. சரியான நடிகர்கள் தேவை என்று நினைத்தேன். பாலாஜி என்பவர் கிரேசிமோகன் பாணியில் எங்களுக்கு அதை தமிழ்ப்படுத்திக்கொடுத்தார். பெருசு படத்தின் கதை இரண்டு சகோதரர்கள் பற்றியது என்பதால், நிஜ அண்ணன் த ம்பிகளான சுனில், வைபவ் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், இது வேற மாதிரியான படம். அவர்களின் அப்பா பிரபல இயக்குனர் இந்த கதைக்கு சம்மதிப்பாரா என்று யோசித்தோம். கடைசியில், அவர்கள் அப்பா அனுமதியுடன் நடிக்க வந்தார்கள். பெருசு படப்பிடிப்பு தொடங்கியது. நான் சூர்யாவை வைத்து இயக்கும் ரெட்ரோ படத்துக்கு போய்விட்டேன். பெருசு படம் முடிந்தபின் பார்த்தேன். ரொம்ப மெர்ச்சுடான அடல்ட் காமெடி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்ள் குடும்பத்துடன் பார்க்கலாம். இது ஏ சர்ட்டிபிகேட் வாங்கிய படம்.

ஒரு பெரியவர் இறந்துபோகிறார். அவருக்கு இறுதி செய்ய முடியாதபடி ஒரு பிரச்னை. அது என்ன என்பதை அடல்ட் காமெடியாக எடுத்து இருக்கிறார்கள். என் அப்பா கஜராஜ் இதில் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த 107வது படம் இது. இந்த படத்தில் அவர் நடிக்க விரும்பியதோபது, முதலில் இந்த கதையை அவரிடம் சொல்லுங்கள். அவர் என்னை திட்டக்கூடாது. இந்த மாதிரி படம் எடுக்குறீங்க என விமர்சனம் செய்யக்கூடாது என்றேன். கதை கேட்டு அவர் நடித்தார். என் படங்களை விட, இந்த படத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். 18 வயதுக்கு முற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன், கேர்ள்பிரண்ட்டுன் படத்தை பார்த்து ரசிக்கலாம். அப்பாவுடன் கூட பார்த்து ரசிக்கலாம். மைக்கேல்மதன காமராஜன் மாதிரி பெருசு இருக்கும். சூர்யாவை வைத்து நான் இயக்கி வரும் ரெட்ரோ மே 1ம் தேதி ரிலீஸ். போஸ்ட் புரக் டக்‌ஷன் வொர்க் போயிட்டு இருக்குது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...