No menu items!

10 பாகங்களில் மகாபாரதம் – ராஜமவுலியின் அடுத்த ப்ளான்!

10 பாகங்களில் மகாபாரதம் – ராஜமவுலியின் அடுத்த ப்ளான்!

இயக்குனர் ராஜமௌலி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர். இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்கிற வழியை எளிதாக்கியதும் அவரே. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மூலம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி அசரவைத்தார். பாகுபலி 1. 2 பாகம் படங்களுக்குப் பிறகுதான் அனைவரும் வரலாற்றுக் கதையை திரைப்படமாக எடுக்கலாம் என்கிற பாதையை தேர்ந்தெடுத்தனர். திரையுலகில் இவரது சாதனையை பாராட்டி ஹாலிவுட் இயக்குனர்கள் இவரைப் பாராட்டி பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபலமான ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ராஜாமௌலியின் வாழ்க்கையை டாக்குமெண்ட்ரியாக எடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது. தெலுங்கு சினிமாவிற்கு பான் இந்தியா என்கிற மார்க்கெட்டை திறந்து வைத்தது ராஜமௌலிதான்.

இவர் அடுத்து என்ன திரைப்படம் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. தனது ஹீரோவான பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார் ராஜமௌலி.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இவர் இயக்க இருக்கிறார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து முடிந்திருக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்காக மகேஷ்பாபு நீண்ட தலைமுடியை வளர்த்து ஆளே மாறியிப்போயிருக்கிறார்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவு ப்ராஜெக்ட் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கதையை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் அந்த வகையில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கும் ஒரு கனவு ப்ராஜெக்ட் இருக்கிறது. இந்திய காவியமான ‘மகாபாரதம்’. இந்த இதிகாசத்தை எப்படியாவது ஒரு நாள் எடுப்பேன் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், அவர் மீண்டும் ஒருமுறை அதே விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் ‘மகாபாரதம்’ செய்தால், அது பத்து பாகங்களாக இருக்கலாம் இது எனது லட்சியம் என்று பலமுறை கூறியுள்ளேன். நான் எப்போது செய்வேன் என தெரியவில்லை. அதைத் தொடங்க இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். மகாபாரதத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே ஒரு மாதிரி இருக்கும். அந்த வேலையை எல்லாம் செய்ய பல வருடங்கள் ஆகும். அதுமட்டுமல்ல, கொஞ்சம் பயமும் இருக்கு. அதை என்னால் கையாள முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். இந்திய கதைகளை உலகிற்கு சொல்ல வேண்டும். ‘மகாபாரதம்’ எனது கனவு ப்ராஜெக்ட். இருப்பினும், அந்த கடலில் இறங்க இன்னும் நிறைய நேரம் ஆகும். அதற்கு முன் ஐந்து படங்கள் கூட பண்ணலாம் என்று கூறியிருக்கிறார் ராஜமௌலி.

இவருடைய இந்த முயற்சி கைகூடி வந்தால் உலகம் முழுவதற்கும் நம் இந்திய நாட்டின் இதிகாசப்பெருமை தெரியவரும். ஆனால் ஏராளமான கிளைக்கதைகளைக் கொண்டிருக்கும் மகாபாரதம் அவ்வளவு எளிதாக திரைக்கதைக்குள் அடங்குமா என்பது மிரள வைக்கும் கேள்விதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...