நடிகை கீர்த்திசுரேஷ், ராதிகா ஆப்தே நடித்த ‘அக்கா’ என்ற வெப்சீரியஸ் விரைவில் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அக்கா டீசர் வெளியிடப்பட்டது. தர்மராஜ் இயக்கிய இந்த வெப்சீரியசில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்திசுரேஷ்.
1980களில் இந்த கதை நடக்கிறது. இதில் பெண் கேங்ஸ்டர் ஆக வருகிறார் கீர்த்திசுரேஷ். இன்னொரு கேங்ஸ்டராக ராதிகா ஆப்தே வருகிறார். இவர் கபாலி படத்தில் ரஜினி மனைவியாக நடித்த இந்தி நடிகை. இவர்களுக்கு இடையேயான தங்க கடத்தல், ஆயுதப்போட்டி, சண்டைகளே அக்கா கதை என்று தெரிகிறது. மற்ற படங்களை விட, உடை, நடிப்பிலும் இதில் மாறுபட்ட வேடத்தில் வருகிறார் கீர்த்திசுரேஷ். அந்த கெட்அப், டீசரை பார்த்தவர்கள் கீர்த்திசுரேசை பாராட்டுகிறார்கள்.
மும்பையில் நடந்த இந்த பட விழாவுக்கு கூட சற்றே கவர்ச்சியாக வந்திருந்தார் கீர்த்திசுரேஷ். திருமணத்துக்குபின் அவர் நடிப்பில் வெளிி வர இருக்கும் படைப்பு என்பதால் அக்கா கூடுதல் கவனம் பெறுகிறது. அதேபோல், நிஜ வாழ்க்கையில் அம்மா ஆனபின் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகும் படைப்பு அக்கா. தமிழில் இந்த மாதிரி பெண் கேங்ஸ்டர் கதைகள் வராத நிலையில், அக்கா படத்தின் டீசர் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்குமுன்பு சாணிகாகிதம் படத்தில் ஆக் ஷன் கலந்து நடித்தார் கீர்த்திசுரேஷ். அதுவும் ஓடிடியில் வந்தது, தியேட்டரில் வரவில்லை. அவர் நடித்த ரகுதாத்தா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. உதயநிதியுடன் நடித்த மாமன்னன், ஜெயம்ரவியுடன் நடித்த சைரன் படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால், அதற்கு முன்பு தெலுங்கில் நடித்த தசரா படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால், இனி ஆக் ஷன் படங்களில் கவனம் செலுத்தலாம் என்று கீர்த்திசுரேஷ் முடிவு செய்து இருக்கிறாராம்.