ராஷ்மிகா நடித்த கேர்ள் பிரண்ட் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் விஜய்தேவரகொண்டா. அவர் கேர்ள் பிரண்ட் ‘ராஷ்மிகா மந்தனா’னு உலகத்துக்கே தெரியும். அதனால், அன்பு பிரஷர் காரணமாக இந்த டீசரை வெளியிட்டு இருக்கிறார் காதலன்.
ராகுல்ரவீந்திரன் இயக்கும் இந்த படத்தில் கதைநாயகியாக நடித்த நடித்துள்ளார் ராஷ்மிகா. தெலுங்கில் படம் உருவானாலும், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் படம் டப்பாகிறது. இன்னொரு விஷயம், இயக்குனர் ராகுல் ரவீந்திரன் வேறு யாருமல்ல, பாடகி சின்மயி காதல் கணவர். மாஸ்கோவின் காவிரி படத்தில் சமந்தா, தி இந்தியன் கிச்சன் படத்தில் ஐஸ்வர்யாராஜேஷ் ஜோடியாக நடித்தவர். இப்போது இயக்குனர் ஆகிவிட்டார்.
ராஷ்மிகா நடித்த புஷ்பா2 கூரையை பிய்த்துக்கொண்டு ஓடுவதால், கேர்ள் பிரண்ட் படத்தை சுடச்சுட வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. புஷ்பா படத்தின் ஹீரோவான அல்லுஅர்ஜூன் டாடி அல்லு அரவிந்த்தான் இந்த படத்தை வெளியிடுகிறார். படம் குறித்து விஜய் தேவரகொண்டா “”தி கேர்ள்பிரண்ட்” டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். “தி கேர்ள்பிரண்ட்” படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். மலையாளம், தெலுங்கில் பிரபலமான ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இதற்கிடையில், ராஷ்மிகாவோ ‘‘இந்தியில் நான் நடித்த அனிமேல் பெரிய ஹிட், இப்போது புஷ்பா2 ஆயிரம் கோடியை தொடப்போகிறது. ஆகவே, இந்தியளவில் நான் டாப் ஹீரோயின்களின் ஒருவர், தென்னிந்தியாவில் நான்தான் டாப் என்கிறாராம் ராஷ்மிகா. உண்மையான லேடி சூப்பர்ஸ்டார் இப்ப நான்தான் என்கிறாராம். இப்போது அவர் நடித்த ஹீரோயினுக்கு முக்கியத்துவள்ள படமான கேர்ள் பிரண்ட் வெற்றி பெற்றால், ராஷ்மிகா சம்பளம் 10 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் 10 கோடி சம்பளத்தை தாண்டியே ஒரே ஹீரோயின் நயன்தாரா என்பதால், அந்த ரிக்கார்ட்டை முறியடிக்கிற நினைக்கிறாராம் ராஷ்மிகா. அதேசமயம், நயன்தாரா, கீர்த்திசுரேஷ், அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால், தமன்னா நடித்த பல ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் ஓடவில்லை. இப்படி பீக்கில் இருக்கும்போது நீங்கதான் படத்துக்கு ஹீரோ. வேறு ஹீரோ கிடையாது. உங்களை எங்கேயோ கொண்டு போகுது இந்த கதைனு பலர் வருவாங்க. அவர்களின் ராஷ்மிகா உஷாராக இருக்க வேண்டும். ராஷ்மிகா நடிப்பை விட, அவர் கவர்ச்சியை, பாடல்காட்சியைதான இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வது தனிக்கதை