ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ‘கேம்சேஞ்ஜர்’ போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படம் தமிழகத்தில் தோல்வி என்றே சொல்லலாம். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் ஓரளவு சுமாராகவே இப்படம் ஓடியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இப்படத்தை கிண்டல் அடித்துள்ளனர்.
இந்தியன் 2, கேம்சேஞ்ஜர் ஆகிய படங்கள் தோல்வி அடைந்த நிலையில், ஷங்கரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இனி ஷங்கர் அவ்வளவுதான் என்று பலரும் கிண்டல் அடிக்கிறார்கள்.
உண்மையிலேயே ஷங்கரின் சகாப்தம் முடிந்தவிட்டதா? அடுத்த படம் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறாரா என்று விசாரித்தால், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே முக்கியமான நபர் ஷங்கர். அவர் கொடுத்த வெற்றி அதிகம். அவரின் படைப்பு, கருத்து, பிரமாண்டம் இன்றும் பேசப்படுகிறது. அவர் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் தோல்வி என்பதற்காக அவரை தவறாக மதிப்பிடக்கூடாது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
“ஷங்கர் அடுத்து இந்தியன் 3 படத்தை வெளியிடலாம். அந்த படத்தில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அது சரியாகிவிட்டால், இந்த ஆண்டு இந்தியன் 3 வெளியாகும். அதற்கடுத்து, வேள்பாரி படத்தை இயக்க ஷங்கர் உள்ளார். சு.வெங்கடேசன் எழுதிய அந்த கதையை 3 பாகமாக எடுக்க உள்ளார். அதில் ரன்வீர், சூர்யா, மகேஷ்பாபு உட்பட பலரை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. பட்த்தின். ஹீரோ முடிவாகவில்லை என்பது மட்டுமல்ல, தயாரிப்பாளரும இன்னமும் முடிவாகவில்லை. அதற்கடுத்து, வேறு சில படங்களையும் இயக்க அவர் தயாராக இருக்கிறார். இப்போதும் அவருக்கு கால்ஷீட் கொடுக்க பல முன்னணி ஹீரோக்கள் தயாராக இருக்கிறார்கள்.