No menu items!

IPL retention –  கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

IPL retention –  கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

அடுத்த ஆண்டு ஐபிஎல்லுக்கான ஏலத்துக்கு முன்னதாக, அதில் பங்கேற்கும் அணிகள் சில முக்கிய வீர்ர்களை தக்கவைத்துள்ளன. இது தொடர்பான பட்டியலை 10 அணிகளும் நேற்று வெளியிட்டுள்ளன. இந்த retention பட்டியலில் நாம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஏலத்துக்கு வரும் ரிஷப் பந்த்:

ஐபிஎல் போட்டியில் ஆடவந்த காலத்தில் இருந்தே டெல்லி அணிக்காக ஆடி வந்தவர் ரிஷப் பந்த். ஆனால் இந்த முறை அவரை டெல்லி அணி தக்கவைக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பந்த்தின் விருப்பத்தின் பேரிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த், அடுத்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலோ, அல்லது ஆர்சிபி அணியிலோ ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 கேப்டன்கள் நீக்கம்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக, கடந்த முறை பல்வேறு அணிகளுக்கும் பொறுப்பேற்ற 5 கேப்டன்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளஸ்ஸி, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் மீது உள்ள அழுத்தம் இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

இந்தியர்களை நம்பும் ராஜஸ்தான்:

இந்த ஐபிஎல்லில் மற்ற அணிகளைவிட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய வீர்ர்களை அதிகமாக நம்புவது அவர்கள் வீர்ர்களை தக்கவைத்த வித்த்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல்,   சந்தீப் சர்மா ஆகிய 5 இந்திய வீர்ர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.  அதேநேரத்தில் டிரெண்ட் போல்ட், பட்லர் போன்ற வெளிநாட்டு வீர்ர்களை அந்த அணி கைகழுவி உள்ளது.

தோனி, கோலி மீது தொடரும் நம்பிக்கை:

தோனி மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருப்பது, அவர்களை அந்த அணிகள் தக்கவைத்ததில் இருந்தே தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஆர்சிபி அணிகாக இதுவரை கோலி ஒரு கோப்பையைக்கூட வென்று கொடுக்காவிட்டாலும், 21 கோடி ரூபாய் கொடுத்து அவரை தக்க வைத்துள்ளது ஆர்சிபி. அதே நேரத்தில் தோனிக்கு 43 வயதான நிலையிலும், அவரைப் பிரிய முடியாமல் அன்கேப்ட் வீரராக 4 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

73 பந்துகளும் 11 கோடி ரூபாயும்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வெறும் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டவர் குல்தீப் யாதவ். காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் அவர் வெறும் 73 பந்துகளை மட்டுமே வீசி இருந்தார். இந்த 73 பந்துகளிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்த குல்தீப் யாதவ், இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இப்போது அவரை 11 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...