No menu items!

ஒலிம்பிக் கிராமத்தில் ஆள்மாறாட்டம் – இந்திய வீராங்கனைக்கு சிக்கல்

ஒலிம்பிக் கிராமத்தில் ஆள்மாறாட்டம் – இந்திய வீராங்கனைக்கு சிக்கல்

இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

வினேஷ் போகட்டுக்கு பதில் தேர்வானவர்

கடந்த 2016 மற்றும் 2020 ஆகிய 2 ஒலிம்பிக் போட்டிகளிலும் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றவர் வினேஷ் போகட். ஆனால் இந்த ஆண்டு, அவருக்கு பதிலாக அன்திம் பங்கால் என்ற வீராங்கனை 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023-ல் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால், இந்த போட்டிக்கு 53 கிலோ எடைப்பிரிவில் அன்திம் பங்கல் தேர்வாகி இருந்தார். அதனால்தான் வினேஷ் போகட் தன் எடையைக் குறைத்து 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க வேண்டி இருந்தது.

50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகட், 120 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதே நாளில் 53 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் அன்திம் போகட். இந்த தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கு முன்பே, மற்றொரு அதிர்ச்சி அவரைத் தாக்கியது.

ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு

தனது முதல் சுற்று போட்டி முடிவடைந்ததும் அன்டிம் பங்கல் ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்லாமல், தன்னுடைய பயிற்சியாளsர்கள் பதகத் சிங், விகாஷ் ஆகியோர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர் தனக்கான அனுமதிச் சீட்டை தன் சகோதரியிடம் கொடுத்து, அவரை ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பி தனது உடைமைகளை எடுத்து வரக் கூறியதாக சொல்லப்படுகிறது.

அன்திம் பாகலின் சகோதரி ஒலிம்பிக் கிராமத்துக்குள் சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்ததையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அன்திம் பங்கலும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க அன்திம் பங்கலின் பயிற்சியாளர்களான பகத், விகாஷ் ஆகியோர் வாடகைக் காரில் மதுபோதையுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒட்டுநர் அளித்த புகாரின் பேரில், பயிற்சியாளர்கள் இருவரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒலிம்பிக் விதிகளை மீறியதாக அன்திம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்களுக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. அவர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் இன்று இந்தியா திரும்பினார்.

அன்திம் பங்கல் மறுப்பு

தன் மீதான குற்றச்சாட்டுகளை அன்திம் பங்கல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “முதல் சுற்று போட்டியில் தோற்ற பிறகு எனக்கு காய்ச்சல் வந்தது. அந்த நேரத்தில், என்னை அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல என் சகோதரி விரும்பினார். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் செல்ல எனது பயிற்சியாளர்களிடம் அனுமதி பெற்றேன்.

அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு, நான் ஹோட்டலுக்கு வந்தேன். அந்த சமயத்தில் ஒலிம்பிக் கிராமத்தில், நான் வைத்திருந்த பொருட்களில் சில எனக்கு தேவைப்பட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்தப் பொருட்களை எடுக்க என் சகோதரி எனது அங்கீகார அட்டையை எடுத்துக் கொண்டு ஒலிம்பிக் கிராமத்திற்குச் சென்றார். அப்போதுதான் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்த உண்மையை அவர்கள் புரிந்துகொண்ட பின்பு, என் சகோதரியை விடுவித்தனர். அதுபோல், என் பயிற்சியாளர் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் சண்டையிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதிலும் உண்மையில்லை.

முதல் சுற்றில் நான் தோற்றவுடனேயே ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் இந்தியாவுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யச் சொன்னேன். அவர்களும் அதன்பேரிலேயே விமான முன்பதிவைச் செய்திருந்தனர். ஆனால், என்னுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்குள், என் சகோதரி நுழைய முயன்றதாகவும், அதன்பேரிலேயே என் குழுவினர் உடனேயே நாடு கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...