ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட விவகாரம். இப்போது புதிய திருப்பமாக, மபி முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கால் கழுவி மரியாதை செய்த நபர், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட இளைஞர் அல்ல என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டம், குப்ரி கிராமத்தைச் சேர்ந்த, மனநலம் குன்றிய பழங்குடியின கூலித் தொழிலாளி தாஷ்மத் ராவத். இவர் முகத்தில், பாஜக எம்.எல்.ஏ. கேதார் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா சிகரெட் புகைத்தபடி சின்றுகொண்டே சிறுநீர் கழித்த வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வீடியோ ஆதாரம் இருந்தும் முதலில் இதனை பாஜக மறுத்தது. பிரவேஷ் சுக்லா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தாஷ்மத் ராவத் குடும்பத்தினர் மறுத்தார்கள். அத்துடன் அவர்கள் கையெழுத்து போட்ட ஸ்டாம்ப் பேப்பரும் வெளியானது. ஆனால், வீடியோ ஆதாரம் இருந்ததால் இந்த நிகழ்வை மூடி மறைக்க முடியவில்லை.
பிரவேஷ் சுக்லாவை பாஜக காப்பாற்ற முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின்னர்தான் பிரவேஷ் சுக்லா எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் ‘சட்ட’ நடைமுறைப்படி ப்ரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான வீடு பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டது. அந்த வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் ஒரு ட்விஸ்ட்… முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை தனது இல்லத்திற்கு வரவழைத்த மபி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அந்த பழங்குடி இளைஞரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, சித்தி மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட தஸ்மத் ராவத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாகவும், ரூ.1.50 லட்சம் வீட்டை புனரமைக்கும் செலவுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அடுத்த ட்விஸ்ட்டு… முதலமைச்சரால் கால் கழுவி மரியாதை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார். “அவர் தவறு செய்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட், அவரை விடுவிக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்” எனத் தஷ்மத் ராவத் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
இதுவரை நடந்தது எல்லாம் ட்விஸ்ட்டே இல்லை இதுதான் சூப்பர் ட்விஸ்ட்டு என்பதுபோல் இப்போது ஒரு திடீர் திருப்பம்…
பிரவேஷ் சுக்லாவால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட பழங்குடி இளைஞரும் மபி முதலமைச்சாரால் கால் கழுவி மரியாதை செய்யப்பட்டதுடன், பிரவேஷ் சுக்லாவை மன்னித்து விடுதலை செய்துவிடலாம் என்று சொன்ன நபரும் ஒருவரவல்ல.
போலி நபரை வைத்து பாஜக நாடகமாடியுள்ளதை வெளிக்கொண்டு வந்த The Quint செய்தியாளர் இது தொடர்பாக முதலமைச்சரால் கால் கழுவி விடப்பட்ட நபரை பேட்டி கண்டுள்ளார். அதில் அவர், “சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் நான் அல்ல” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் கால் கழுவிவிட்டது நாடகம் என்று விமர்சித்த எதிர்கட்சிகள்… ‘அதுலயும் ஆள் மறாட்டமா?’ என வாயடைத்து போயுள்ளன.
இன்னும் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுமோ? எது உண்மை என்று எப்போது தெரிய வருமோ?