தென் தமிழக மாவட்டங்களில் நாளை இரவு வரை 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Swell surge காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் அளவுக்கு அதிகமாஅக ஆர்ப்பரிக்கும் என்றும். 1.88 மீட்டர் வரை அலைகளின் உயரம் இருக்க்க்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Swell surge என்பதை தமிழில் கள்ளக்கடல் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மினி சுனாமியின் அளவுக்கு கடல் அலைகள் அதிக ஆர்ப்பரிப்புடன் காணப்ப்ப்டும் என்று கூறப்படுகிறது.
இதன்படி குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகள் ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் என்றால் என்ன?
கடலோர வெள்ளம் என்று அழைக்கப்படும் கள்ளக்கடல், பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அலைகள் வீசுவதால் பருவமழைக்கு முந்தைய பருவத்தில் (ஏப்ரல்-மே ) நிகழ்கிறது. மலையாளத்தில் , கள்ளன் என்றால் திருடன் என்றும், கடல் என்றால் கடல் என்றும் பொருள்படும், எனவே இந்த சொல் “திருடனாக வரும் கடல்” என்பதைக் குறிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) 2012 இல் அதிகாரப்பூர்வமாக இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டது. கள்ளக்கடல் எந்தவித முன்னோடிகளோ அல்லது உள்ளூர் காற்றின் செயல்பாடுகளோ இல்லாமல் திடீரென நிகழ்கிறது, இது கடலோர மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெறுவதற்கு சவாலாக உள்ளது. இருந்தாலும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS ) ஸ்வெல் சர்ஜ் முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது, இது ஏழு நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையை வழங்குகிறது.