சென்னையில் நடந்த ‘பாட்டல் ராதா’ பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் வரம்பு மீறி பேசியது, ஆபாசமாக பேசியது பல எதிர்ப்பலைகளை உருவாக்கியது. சினிமாதுறையில் இருக்கும் பலரும் அந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் மிஷ்கினுக்கு கடும் எதிர்ப்பு. ஆனாலும், அவர் அந்த பேச்சு குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார். தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்காமல் இருந்தார். இனி, மிஷ்கின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
இந்நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கும் பேட் கேர்ள் என்ற பட நிகழ்ச்சி, சென்னை சத்தியம் தியேட்டரில் நடந்தது. அதில் சிறந்து விருந்தினராக கலந்துகொண்ட மிஷ்கின் பேசியதாவது ‘‘நான் நிறைய அவமானங்கள், போராட்டங்களை சந்தித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தை எடுத்தேன். அது முதல்நாள் ரிலீஸ் ஆகலை. என் நண்பரான ஒரு இயக்குனர், ஒரு பெரிய ரூமுக்குள் அழைத்து சென்று மிரட்டி அந்த பட டிவி உரிமையை வாங்கினார்கள். 2 கோடி கேட்டேன். 75 ட்சம்தான் தந்தார்கள். 20 தடியர்கள் வைத்து என்னை மிரட்டி, ரூ. 75 லட்சத்திற்கு கையெழுத்து போட வைத்தார்கள்.
இன்றுவரை அந்த படம் 80 தடவை டிவியில் ஒளிபரப்பு ஆகியிருக்கு. அவங்க கொடுத்த செக்கை, , அவங்க முன்னாடியே கிளிச்சு போட்டேன். சென்னைக்கு வரும்போது ஒரு வெள்ளை பேப்பர் மற்றும் ஒரு பென்சில் தான் எடுத்துவந்தேன். அவ்வளவு வறுமையான குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். நான் கஷ்ட்டப்பட்டு மீண்டு வருவேன் என கூறினேன்.
என்னால், எப்படி ஒரு சக மனிதனை பார்த்து மோசமாக பேசமுடியும். எனக்கு பேச வேண்டிய கட்டாயமா? நான் ஒரு படத்தின் மேடைக்கு வந்தால், அப்படத்தை கூவி விற்க வேண்டும். ஏன் நான் கொட்டுக்காளி படத்திற்கு நிர்வாணமாக நிற்கிறேன் என சொன்னேன். அப்படியாவது அப்படம் கவனத்தை ஈர்த்துவிடாது என்பதற்காக தான். எனக்கு நேரமே இல்லை. 40 வருடங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்களை நான் சந்திக்க வேண்டியது இருக்கிறது. அவ்வளவு நாடுகளுக்கு நான் செல்ல வேண்டியது இருக்கிறது. பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
முகம் சுழிக்கும் வகையில் பேசியதற்கு நிறைய பேர் திட்டினார்கள். அந்த நிகழ்வில் நான் பேசும்போது எல்லோரும் சிரித்தார்கள். அதில் சில வார்த்தைகள் எல்லைமீறிவிட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை. விஷாலும் நானும் சண்டைபோடும்போதும், ஒரு வார்த்தை கூட மோசமாக நான் பேசவில்லை. இந்த விவகாரத்தில் “என் மேல் செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய ஒரு நண்பர் அவர்களிடமும் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.