இசைஞானி இளையராஜா அவர்கள் 2025ம் ஆண்டு தனது சிம்ப்பொனியை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ரசிகர்க்ளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. எல்லோரும் அந்த நாளை எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் சிம்பொனியை எழுதி பதிவு செய்து முடித்து விட்டதாக ஒரு தகவலை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை தன்னிடம் சிம்பொனியை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட பாடகர் ஜேசுதாஸிற்கு கேட்கும்படி பேசியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஜேசுதாஸின் வாழ்நாள் சாதனையை பாராட்டும் வகையில் பிரமாண்டமான விழா எடுக்கப்படது. இந்த விழாவில் இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜேசுதாஸ் சிம்பொனியை விரைவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மலையாளத்தில் பேசி காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’அன்புக்குரிய கேரள மக்களே, சொந்தங்களே.. வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய அண்ணன் ஜே.சி. அண்ணனுக்கானது மட்டும் தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைச்சு, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார்.
அது என்னவென்றால், அவர் ராஜா வந்து சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி செய்து ரிலீஸ் செய்யணும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
இங்கு தமிழ்நாட்டில் நான் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். சிம்பொனி அமைச்சிருக்கேன். இந்நிலையில் என்ன நினைப்பில் ஜே.சி. அண்ணன் சொன்னரா, அந்த வேலை முடிந்தது. குறிப்பாக, சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து வைச்சிருக்கேன். அதனை ஜே.சி.அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவிக்கிறேன். அதனால் இதனை சொல்கிறேன். அண்ணா நமஸ்காரம். அண்ணா நீங்கள் சொன்ன வேலை, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். அண்ணன் செய்ததை நான் நிறைவேற்றிட்டேன்’’ என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.