No menu items!

பாலிவுட் நடிகை நோரா பதேகி போல் மனைவி இருக்க வேண்​டும் என்று கணவர்  கொடுமை

பாலிவுட் நடிகை நோரா பதேகி போல் மனைவி இருக்க வேண்​டும் என்று கணவர்  கொடுமை

திரு​மண​மாகி 6 மாதங்​களே ஆன நிலை​யில் முராத்​நகர் போலீஸ் நிலை​யத்​தில் புது மனைவி நேற்று முன்​தினம் அளித்த புகார்

திரு​மணத்​துக்குபிறகு மீரட்​டில் உள்ள கணவர் வீட்​டுக்கு சென்​ற​போது, பாலிவுட் நடிகை நோரா பதேகி போன்று மனைவி வேண்​டும் என்று கணவர் வலி​யுறுத்​தி​னார். என்னை உடற்​ப​யிற்சி கூடத்​துக்கு அனுப்பி தின​மும் 3 மணி நேரம் உடற்​ப​யிற்சி செய்ய நிர்​பந்​தம் செய்​தார்.

உத்தர பிரதேசத்​தின் காஜி​யா​பாத் மாவட்​டம், முராத்​நகரை சேர்ந்த இளம்​பெண்​ணுக்​கும், மீரட் பகு​தியை சேர்ந்த உடற்​கல்வி ஆசிரியர் சிவம் உஜ்​வாலுக்​கும் கடந்த மார்ச் மாதம் திரு​மணம் நடை​பெற்​றது.

உணவு கட்​டுப்​பாடு என்ற பெயரில் என்னை பசி, பட்​டினி​யில் வாடச் செய்​தார்.நீ உயர​மாக இல்​லை. அழகாக இல்லை என்று கூறி நாள்​தோறும் கணவர் அவமானப்​படுத்தி வந்​தார்.

தற்​போது எனது தாய் வீட்​டுக்கு வந்​து​விட்​டேன். விவாகரத்து செய்​து​விடு​வதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுகின்றனர்.எனது நகைகளை கணவர் குடும்​பத்​தினர் பறித்து வைத்​துள்​ளனர்.

கணவர், அவரது தந்தை மற்​றும் சகோ​தரி​கள் சேர்ந்து என்னை தொடர்ந்து கொடுமைப்​படுத்தி வரு​கின்​றனர். அவர்​களால்​தான் எனக்கு கருச்​சிதைவு ஏற்​பட்​டது. அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அந்த பெண் புகார் மனு​வில் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து குடும்ப வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...