’சிவாஜி’ என்ற ஒரேயொரு படம்தான். அதற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க முடியுமெங்கிற ஒரு மாயைக்குள் விழுந்துவிட்டார் ரஜினி. அதேபோல் இவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்தால்தான் இவரது கால்ஷீட் கிடைக்கும் என்ற இமேஜையும் உருவாக்கிவிட்டார்.
இதனால் ரஜினியை வைத்து தனியொரு தயாரிப்பாளர்களால் படமெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏவிஎம். லைகா, சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் படங்களில் மட்டுமே ரஜினி நடித்திருக்கிறார். இவை தவிர கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இரண்டுப் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்.
இப்போது மீண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் இவருக்கு சம்பளம் இதுவரையில் இல்லாத சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
இதுவரையில் தென்னிந்திய இயக்குநர்கள் யாரும் வாங்காத சம்பளமாக 60 கோடி ரூபாய் சம்பளம் லோகேஷ் கனகராஜூவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். லோகேஷ் கனகராஜூவுக்கு இப்படி யென்றால் ரஜினிக்கு எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
ரஜினிக்கு சுமார் 260 – 280 கோடி சம்பளம் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் இந்த தொகைக்கு உடனே ஒப்புக்கொள்ளவே இப்போது ரஜினி ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என புதிய சாதனையைப் படைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ், ஷாரூக்கான் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர்,. அவரது சம்பளம் 150 கோடி மற்றும் 250 கோடி என்று குறிப்பிட்டு இருந்தது. இவருக்கு அடுத்து ரஜினி 150 கோடியிலிருந்து 210 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறியிருந்தது.
ரஜினியின் சம்பளம் 260 – 280 கோடி என்பதால், இப்போது ஷாரூக்கானையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ரஜினி.
விக்ரம் மகனை குறிவைக்கும் பெண் இயக்குநர்
நடிப்புக்கு பெயர் வாங்கிய விக்ரம், இப்போது தனது மகனுக்கு அப்படியொரு நல்லப் பெயர் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால் எப்படியாவது தனது மகன் துருவ் விக்ரமை நடிகர்களுக்கென அங்கீகாரத்தை பெற்று கொடுக்கும் இயக்குநர்கள் படங்களில் நடிக்க வைப்பதில் முனைப்பாக இருக்கிறார்.
இதனால்தான் துருவ் எங்கேயும் வாயைத் திறக்கவும் இல்லை. பொதுவெளியில் அதிகம் தென்படவும் இல்லை. வெற்றி கொடுத்தப்பிறகே இனி பேச்சு என்று அமைதியாகிவிட்டார்.
இந்நிலையில் விக்ரம் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு படம் நிகழ வாய்ப்பிருக்கிறது. இந்த முறை துருவை, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வைக்க விக்ரம் முயற்சித்து வருகிறாராம்.
சுதா கொங்கரா இப்போது ‘சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்தப்படம் முடிந்ததும். சூர்யா கங்குவாவை முடித்த தும் இவர்கள் இருவரும் இணையும் பட வேலைகள் தொடங்க இப்போதைக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படம் முடிந்ததும் எப்படியாவது சுதா இயக்கத்தில் துருவை நடிக்க வைத்துவிட வேண்டுமென பின்னணியில் வேலைகள் நடக்கிறதாம். அதேபோல் சுதாவும் துருவை நடிக்க வைக்கும் நோக்கத்துடன் ஒரு கதையையும் சொல்லியிருக்கிறாராம். விக்ரம்தான் சுதா பட த்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்தாலும், தசுதாவும் துருவை நடிக்க வைக்க குறிவைத்து ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தாராம். இப்படி இரு தரப்புமே அடுத்து படம் பண்ண தயாராக இருப்பதால், வெகு விரைவிலேயே இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.