No menu items!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிய காலம்தொட்டு அதன் இறுதிப் போட்டியில் ஆடும் 2 அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நியூஸிலாந்து அணியிடமும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிடமும் தொடர்ச்சியாக தோற்றதால், இம்முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த சூழலில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் ஒரே போட்டி தான் மீதம் உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அந்த வகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணியின் புள்ளிகள் 57.02 ஆக மாறும். இந்த புள்ளிகளை வைத்தே ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். இப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவும் பட்சத்தில் அந்த அணி இலங்கையை ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.

இந்திய அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்ற வேண்டும். இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். அல்லது ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளும் டிரா ஆகும் போது ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். இதைவிட நிலைமை மோசமானால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

ஒருவேளை இரு அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் சமமாக இருந்தால், சீரிஸ் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும்.

எதுவாயினும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...