No menu items!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விவாதம் செய்யப்பட்டது. எதிர்மனுதாரர்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 17ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தோல்விகரமான வெற்றி – ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் குறித்து ஜெயக்குமார்

சென்னை, கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இது போன்று அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். எங்களை பார்க்காமல் இருப்பதற்கு பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களை பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான்” என்று கூறினார்.

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், அந்த வீடியோக்களுக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், ‘சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டி: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தோபாஷிஸ் பானர்ஜியை விட 22,980 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வி திரிணாமூல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “மம்தா பானர்ஜி பாஜக தனது வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்துள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜகவின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி இனிமேல் தன்னை பாஜகவிற்கு எதிரான கட்சி என சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டது. பாஜகவோடு காங்கிரசும், இடதுசாரிகளும் கள்ள உறவு வைத்துள்ளதால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து தனித்தே போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...