வெப்பம், நான் ஈ, ஷியாம்சிங்காராய், தசரா போன்ற படங்களில் நடித்தவர் நானி. சமீபகாலமாக இவரின் படங்களில் தமிழிலும் வெளியாகிறது. அந்தவகையில் அவர் நடித்த ஹிட்3 படம், மே1ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸ். கேஜிஎப் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதிஷெட்டி இதில் ஹீரோயின். சென்னையில் நடந்த விழாவில் நானி பேசியது
‘‘எனக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். நானும் சென்னையில் சினிமா பார்த்து, ரசித்து வளர்ந்தவன். இன்றைக்கும் பொது இடங்களில் தமிழ் ரசிகர்கள், ஆர்வமாக, பாசமாக பேசுகிறார்கள். என் படங்களை, காட்சிகளை குறிப்பிட்டு சொல்கிறார்கள். அந்தவகையில், இன்றைக்கு தமிழ்நாடு என்று எழுதப்பட்ட சர்ட் அணிந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். குடும்பஸ்தஸ் என்ற வெற்றி படத்தை தயாரித்த சினிமாகாரன் நிறுவனம் ஹிட்3 படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என பலமுறை சொல்லி இருக்கிறேன். 2012 – 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். ஆனாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு – தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
ஹிட்1, ஹிட்2 ஏற்கனவே வெளியாகி உள்ளது. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஹிட் 1 ‘, ‘ஹிட் 2 ‘படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது.
பொதுவாக, நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள். அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன். சைலேஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை.