No menu items!

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: ரூ. 34 ஆயிரம் முதல் ரூ. 84 ஆயிரம் வரையிலான மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் இந்த வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் 295 கிலோ வரை எடையை எடுத்துக் கொண்டு போகலாம். இந்த வாகனத்தில் பேட்டரி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களும் இந்த வாகனத்தில் உள்ளன.

இருசக்கர வாகனம் உலக அளவில் அதிகமாக இருக்கக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. அதேபோல, மின்சார வாகனம் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உருவாகும். சேட்டிலைட் அனுப்பும்போது பேட்டரி என்பது சிறப்பாக இருக்க வேண்டும். பேட்டரியை கவனிக்காததால் சேட்டிலைட் வெடித்த காலங்களும் உண்டு. அதையும் தாண்டி நல்ல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதால் சேட்டிலைட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாயில் செய்த செயற்கைக்கோள் பயனடையும்போது பேட்டரி என்பது மிக முக்கியம்.

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும். சாட்டிலைட் பேட்டரிக்கு அடுத்தபடி அதேபோல் ஒரு பேட்டரி என்பது இந்த வாகனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கரியை கக்கதா மின்சார உற்பத்தியை உருவாக்கும் போது பசுமையான இந்தியா உலகத்திற்கு நாம் போக முடியும்.

இப்போது இருக்கக்கூடிய விண்வெளி அமைப்பில் நாம் நீர் உள்ளிட்ட அனைத்தும் எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை உள்ளது. ஆனால், சீனாவில் நீர் ஆதாரம் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யக்கூடிய அனைத்தும் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை நிலவில் ஒரு மையம் அமைப்பது சரி.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு முக்கியமான தேவை என்பது அடிப்படை வசதிகள், அது இருந்தால் சில மாதங்களில் ராக்கெட் லான்ச் செய்ய முடியும். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வந்த சுனிதா வில்லியம் ,உடலில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...