அஜித் நடித்த குட்பேட் அக்லி, நாளை மறுநாள்(ஏப்ரல் 10ல்) ரிலீஸ் ஆகிறது. அஜித் நடித்த படங்களில் இந்த படம்தான், அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆம், தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீனில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளதால், அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் மட்டும் 20 கோடி வரை வசூலித்ததாக தகவல். கடந்த சில ஆண்டுகளில் அஜித் நடித்த படங்களில் அதிகம் வசூலித்தது விஸ்வாசம்தான். அந்த படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. வலிமை, விடாமுயற்சி, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்றவை 150 கோடிவரை மட்டுமே வசூலித்தது. இதில் பெரும்பாலனவை வெற்றி படங்கள் அல்ல.
அஜித் நடித்த சமீபத்திய படங்களில் விஸ்வாசம்தான் தயாரிப்பாளர், இயக்குனர், தியேட்டர் அதிபர்கள் என 3 தரப்புக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. அந்த சாதனையை குட்பேட்அக்லி முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதியை தொடர்ந்து வரிசையாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது. குட்பேட் அக்லி படத்துக்கு யு. ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 20 நிமிடம் ஓடுவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் பெரிய ஸ்டார் படங்களின் முதல்காட்சி அதிகாலையில் திரைப்படும் . ஆனால், இப்போது காலை 9 மணிக்குதான் முதற்காட்சி போடப்படுகிறது. அதுவும் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டாலும், இந்த படத்துக்காக இதுவரை படத்துக்கு எந்த விளம்பர நிகழ்ச்சியும் நடக்கவில்லை. சென்னை உட்பட எங்கும் பாடல் வெளியீட்டுவிழா, பிரஸ்மீட் நடக்கவில்லை. மேலும் படக்குழுவினர் டிவி. யூ டிடியூப் மீடியாவில் பேசவில்லை. இயக்குனர் மட்டுமே சில இடங்களில் பேசியிருக்கிறார். இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. படத்தை படக்குழு விளம்படுத்த ஆர்வம் காண்பிக்காதது ஏன் என்று தெரியவில்லை.