முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொளைக்குப் பிறகு நாட்டில் அசாதரண சூழல் ஏற்படுகிறது. விசாரனை என்கிற பெயரில் பலரையும் அடித்து துன்புறுத்துகிறது போலீஸ். குறிப்பாக அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழ்ர்களுக்கு பெரிய சிக்கல் வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை கைதிகளாக வேலூர் கோட்டையில் அடைக்கிறது. அப்படி அடைக்கப்பட்ட பல குடுங்களில் சசிகுமார் லிஜோ மோல் ஜோஸ் குடும்பமும் ஒன்று.
சசிகுமாரை பிரிந்து கர்ப்பிணியாக முகாமில் தவிக்கிறார். அவருக்கு குழைந்தையும் பிறந்து வளர்ந்து வருகிறது. முகாமில் பல இன்னல்களை சந்திக்கும் அத்தனைபேரும் கோட்டை முகாமை விட்டு தப்பிக்க திட்டம் போடுகிறார்கள். அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சத்யசிவா.
சசிகுமாருக்கு நல்ல கதாபாத்திரம். அதை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். முகாமுக்குள் நடக்கும் சித்ரதவதைகளைத் தாங்கிக்கொண்டு எப்படியாவது குழந்தையைப் பார்த்து விட துடிக்கும் அந்த ஏக்கம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. அது நடக்காமல் போன கோபத்தில் ஆக்ரோஷமாக மோதும்போது சிலிர்ப்பு. சசிகுமாரின் திரைப்பட வரிசையில் முக்கியமான படமாக இருக்கும்.
லிஜோ மோல் ஜோஸ் கண்ணீரும் கவலையுமாக படம் முழுவதும் வந்து மனதை கலங்க வைக்கிறார். மு. ராமசாமி தன் குடும்பத்தைப் பிரிந்த நாளை எண்ணி அழுவதும், கடிதங்கள் எல்லாம் போகாமல் தடுக்கப்படுவது தெரிந்து கொந்தளிப்பது கவலை. முகாம் அதிகாரியாக வரும் சுதேவ் நாயர், வழக்கறிஞர் மாளவிகா அவினாஷ், சவரனவன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன் ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒருவரி செய்தியாக காட்டி விட்டு படத்தைத் தொடங்குவதை விட்டு ராஜீவ் காந்தியை கவுன்சிலர் மாதிரி பாட்டு போட்டு காட்சிப்படுத்தியிருப்பது பெரிய குறை. முதல் பாதி முழுக்க நாடக்கத்தனமாக செயற்கையாக இருந்தாலும் இரண்டாம பாதியில் திகில், விறுவிறுப்பாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் பரபரப்பாக போவது ப்ளஸ். அகதிகளின் நிலையையும், அவர்களுக்கு அரசு அதிகாரிகள் கொடுக்கும் அலட்சியத்தையும் பதிவு செய்திருப்பது சிறப்பு.
ஜிபரான் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளில் திறம்பட இருக்கிறது. இன்னும் கூடுதல் கவனம் எடுத்து திரைக்கதையில் உழைத்திருந்தால் இயக்குனர் சதிய சிவ விருது பெற்றிருப்பார். உண்மை சம்பவத்தை படமாக்கும்போது கூடுதல் கவனம் தேவை. ஒரு சினிமாவுக்குரிய பரபரப்பு இருக்கிறது.