No menu items!

ஹொய்சாள வம்சம் பின்னணியில் திரௌபதி 2

ஹொய்சாள வம்சம் பின்னணியில் திரௌபதி 2

‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குபின் மோகன்.ஜி இயக்கும் படம் ‘திரௌபதி 2’

படம் குறித்து இயக்குனர் கூறியது:

“எனது முந்தைய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. அதில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்தார். இந்த படத்திலும் எங்கள் கூட்டணி இணை ந்துள்ளது. திரௌபதி’ முதல் பாகத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. காரணம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை இ ந்த பட கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கருஅமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தைக் கவர்ந்தது.

வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மும்பை, ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில், இதற்கு முன்பு எங்கும் பார்த்திராத இடங்களில் மொத்த படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது” என்றார்

மேலும் அவர் கூறுகையில்

“14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உருவாகவுள்ளது. ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படத்தில் நடிக்கவுள்ள பெரிய நடிகர்கள் விவரமும் விரைவில் வெளியாகும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...