No menu items!

தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் -காவல்துறை

தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் -காவல்துறை

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்ஆப் முன் பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்கும்போது, மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.

முன் பின் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் என்று காவல்துறை வெகு நாள்களாக எச்சரித்து வருகிறது. இதற்குக் காரணம், இதுபோன்ற மோசடிகள்தான்.

சைபர் மோசடியாளர்கள், தனிநபர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் விடியோ அழைப்பில் அழைக்கிறார்கள். அப்போது அவர்கள் அதனை ஏற்றால், மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் தோன்று அவர்களுடன் பேசுகிறார்கள். அப்போது, இருவரும் ஒரே ஸ்கிரீனில் இருப்பதை ரெக்கார்டு செய்துகொண்டு, அதனை வெளியிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

அல்லது, அந்த வாட்ஸ் ஆப்பில் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை எடுத்து அதனை போலியாக ஆபாச விடியோக்களாகத் தயாரித்து அதனை வெளியிட்டுவிடுவோம் அல்லது வெளியிட்டுவிட்டோம், பணம் கொடுத்தால்தான் நீக்குவோம் என்று மிரட்டுகிறார்கள்.

உண்மையில், அவ்வாறு விடியோக்கள் வெளியிடுவதுமில்லை. இதுபோன்ற புகைப்படங்களை, செல்போனில் இருக்கும் அனைத்து எண்களுக்கும் அனுப்புவோம் என்று மிரட்டுவார்கள். ஆனால், அதற்காக பயந்து பணம் அனுப்பினால், அவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் பணம் பறிபோகிறதே என்ற அச்சம்தான் அதிகரிக்கும். சிலர் கடன்பெற்று பணம் கொடுத்து ஏமாறும் நிலையும் இருக்கிறது.

தற்காக்கும் வழிகள்

ஆன்லைன் அல்லது சமூக வலைத்தளங்களில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் புகைப்படம் அல்லது விடியோக்களை பகிராமல் இருப்பது.

தெரியாத நபர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படக் கூடாது.

இவ்வாறு பாலியல் தொடர்பான மோசடியாளர்கள் மிரட்டும்போது, பயப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் தனிநபர் பாதுகாப்புகளுக்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்.

சைபர் குற்றத்துக்கு இலக்காக வேண்டாம், அச்சுறுத்தல் ஏற்பட்டால் அழையுங்கள் உதவி எண் 1930.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...