தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து முறையாக இவர்கள் விவாகரத்து பெறாத நிலையில் இருவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. மேலும் விவாகரத்து வழக்கில் இதுவரை இவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் இன்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்றன 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்த போது, ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ உள்ளனர் என்று தகவல் பரவியது. இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக, ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் வேட்டையன் படத்தை ஒரே திரையரங்கில் பார்த்ததோடு, மாமனார் ரஜினிகாந்துக்கு தனுஷ் ‘வேட்டையன்’ பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையாவது இவர்கள் இருவரும் ஆஜர் ஆவார்களா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், காலை 10.30 மணி அளவில் ஐஸ்வர்யா ஆஜரானார். தனுஷ் வருவதற்கு தாமதம் ஆனதால் 12 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனுஷ் 11:30 மணியாளத்தில் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 12 மணிக்கு நீதிபதி முன் ஆஜராகினர்.
இதே போல ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் தங்கள் விவாகரத்து தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனு சமரச மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மன்றத்தில் விவாகரத்துக்கான காரணம் விவாகரத்தை தவிர்க்க இயலுமா போன்ற விஷயங்களை முன்னிறுத்தி ஜெயம்ரவி – ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில் ஆர்த்தி தரப்பிலிருந்து தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை சமரச பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார். இதன் காரணமாக விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி இடையாள சமரச பேச்சுவார்த்தை வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.