நடிகை தேவயானி கதைநாயகியாக நடிக்கும் படம் நிழற்குடை. இதென்ன தலைப்பு. குடைக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தேவயானியிடம் கேட்டபோது அவர் கூறியது
‘‘இந்த படத்தை சிவா ஆறுமுகம் இயக்கி உள்ளார். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. கதையில் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே எனக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள். இந்த இயக்குனர் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் ‘தொட்டாசிணுங்கி’. அந்த படத்தில்தான் நான் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். பல வருடங்களுக்கு இவர் தயாரிப்பாளராக, இயக்குநராகவும் அறிமுகமாகும் படத்தில் நான் முதன்மை வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி. மே 9ம் தேதி படம் ரிலீஸ்
சென்னையில் நடந்த இந்த படவிழாவுக்கு கே.பாக்யராஜ், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் வந்து படத்தை வாழ்த்தினார்கள். எனக்கு வாழ்க்கை கொடுத்த படம் காதல் கோட்டை. அந்த படம் வெற்றி பெற்றதால் பிரபலம் ஆனேன். அதேசமயம், 1995ல் தொட்டாசிணுங்கி படத்தின் மூலம் என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் அதியமான். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். அவரால்தான் தமிழகத்தில் இருக்கிறேன். . இப்போது அந்த டீமுடன் இந்த படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. 30 ஆண்டுகளாக அதே டீம் அதியமான்சாருடன் இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது.
நிழற்குடை முக்கியமான படம். நல்ல கரு இருக்கிறது. இது மக்களிடம் போய் சேர வேண்டும். குடைக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்க. இன்றைய காலகட்டத்துக்கு தேவையான முக்கியமான படம். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.’’என்றார்
படம் குறித்து பேசிய இயக்குனர் செல்வமணி ‘‘இந்த மாதிரி படத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும். நல்ல கருத்து மக்களிடம் போய் சேர வேண்டும். இன்றைக்கு தியேட்டர்கள் மினி ஓட்டல் ஆகிவிட்டது. கேண்டினில் கூட்டம் இருந்தால்தான் படத்துக்கு லாபம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட படத்தை நாம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயி, சினிமா தயாரிப்பாளர் மட்டும்தான், தங்கள் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை. அவர்கள் நிலை படு மோசமாக இருக்கிறது.