No menu items!

சினிமா விமர்சனங்கள் – உயர் நீதிமன்றம் மறுப்பு!

சினிமா விமர்சனங்கள் – உயர் நீதிமன்றம் மறுப்பு!

திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்குள் அதன் விமர்சனத்தை தடை செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே யூடியூப்களில் அதன் விமர்சன்ங்கள் வெளியாகின. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் இருந்து பட்த்தைப் பற்றி கருத்து கேட்டு இதில் ஒளிபரப்பப்பட்ட்து.

அந்த விமர்சனங்களில் ‘கங்குவா’ பட்த்தைப் பற்றி கருத்து தெரிவித்த பலரும், அப்பட்த்தை கண்டபடி திட்டி பேசினர். இது அப்பட்த்தின் வருவாயை கடுமையாக பாதித்தது. இது திரையுலகில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. கங்குவா படத்தைப் போல கமல் நடித்த ‘இந்தியன் 2’ பட்த்தின் தோல்விக்கும் இந்த யூடியூப் விமர்சனங்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை சில தயாரிப்பாளர்கள் முன்வைத்தனர்.

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யு டியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும், விமர்சனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது.

அதையடுத்து தியேட்டர்களில் யு-டியுப் சேனல்கள் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கவில்லை. அதனால், கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களின் வெளியே அந்த வீடியோவை யூடியூப் சேனல்கள் எடுத்து வருகின்றன.

திரைப்பட விமர்சனங்கள் படத்திற்குப் பின்னடைவைக் கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டு படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு சினிமா விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது. மேலும், திரைப்படங்களை விமர்சனம் செய்யும்போது விமர்சகர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்கிட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, “படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனத்தைத் தடை செய்ய முடியாது. விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரம் என்பதால் அதைத் தடை செய்ய முடியாது. அவதூறு பரப்பினால் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்.” எனக் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...