No menu items!

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்!

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்!

குறுகிய கால விசாவில் இருந்த முக்கிய அம்சத்தை  டிரம்ப் நீக்கியுள்ளார். இந்த மாற்றமானது இந்தியாவில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

என்ஐவி(குறுகிய கால விசா) எனப்படும் அமெரிக்க குடியுரிமை அல்லாத விசாக்களுக்கு விண்ணப்பிக்கிறவர்கள், நேர்காணல் நேரங்களை தங்கள் சட்டபூர்வமான குடியிருப்பின் நாட்டிலே  திட்டமிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, விரைவாக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் B1 (வணிகம்) அல்லது B2 (சுற்றுலா) விசா கோரி விண்ணப்பித்து நேர்காணலை வெளிநாட்டில் முன்பதிவு செய்ய முடியாது.

இந்தியாவில் கரோனா காலத்தில் விசா காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள் இருந்தபோது, காத்திருப்பு நேரம் குறைவாகவுள்ள மற்ற நாடுகளில் நேர்காணலுக்கு விண்ணப்பிப்பார்கள்.

இந்த முறையை அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்ய விரும்புவோர், சுற்றுலா, வணிகம், மாணவர்கள், தற்காலிக தொழிலாளர்கள் என விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் பின்பற்றி வந்தனர். இந்தச் சலுகை நீக்கப்பட்டுள்ளது.

இது டிரம்ப் அரசால் விசா விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகும்.

கரோனா காலக்கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையை அமெரிக்க வெளியுறவுத்துறை நீக்கியுள்ளது. அமெரிக்க குடியுரிமை அல்லாத விசா விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகளை வெளியுறவுத்துறை புதுப்பித்துள்ளது.

அமெரிக்கா செல்வோர் அந்த நாட்டு தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விசா நேர்காணல் சந்திப்புகளை திட்டமிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவை தவறாக பயன்படுத்தி அமெரிக்காவில் சிலர் நீண்ட நாள்கள் தங்கி வருகின்றனர். இதனால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு அமெரிக்க குடிமகன்கள் செலுத்தும் வரிப் பணமும் வீணாகிறது.

எனவே, வெளிநாட்டு மாணவா்கள் 4 ஆண்டுகள் மட்டும் தங்கும் வகையிலான விசாக்கள் வழங்கப்படுவதை மாகாண அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சா் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...