No menu items!

புற்​று​நோய் பாதிப்பு இந்தியாவில்  26 சதவீதம் அதிகரிப்பு

புற்​று​நோய் பாதிப்பு இந்தியாவில்  26 சதவீதம் அதிகரிப்பு

இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது.

புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து ‘தி லான்​செட்’ இதழில் வெளி​யான ஆய்வு​களின்​படி, 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது.

இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய இரண்​டும் கணிச​மாக குறைந்​துள்​ளது.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் புற்​று​நோய் நிபுணர் டாக்​டர் அபிஷேக் சங்​கர் கூறுகை​யில், ‘‘அமெரிக்கா மற்​றும் சீனா​வில் புற்​று​நோய் பாதிப்​பும் உயி​ரிழப்​பும் கணிச​மாக குறைந்​ததற்​கு, இவ்​விரு நாடு​களி​லும் வலு​வான புகை​யிலை கட்​டுப்​பாடு, அனை​வருக்​கும் தடுப்​பூசி, ஒழுங்​கமைக்​கப்​பட்ட பரிசோதனை காரண​மாக உள்​ளது.

அதிக புகை​யிலை பயன்​பாடு, உடல் பரு​மன், நோய்த்​தொற்​றுகள் போன்ற ஆபத்து காரணி​கள் இந்​தி​யா​வில் அதி​க​மாக உள்​ளது. அதேவேளை​யில் புற்​று​நோய் தொடக்க நிலை​யிலேயே கண்​டறியப்​படு​வது குறை​வாக உள்​ளது. எனவே புற்​று​நோய் ஆபத்தை தடுக்​கும் உத்​தி​களை நாம் அவசர​மாக வலுப்​படுத்த வேண்​டும்” என்​றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...