திரையுலகில் ஹீரோயின்களிடம் எப்போதுமே போட்டியும், பொறாமையும் நிறைந்து இருக்கும். ஒரு நடிக்கும் படத்தை பற்றி இன்னொருவர் பேசக்கூடமாட்டார். இது எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் அந்த சூழல் கொஞ்சம் மாறி வருகிறது. அங்கு சமந்தா நடிக்கும் படங்களில் தனக்கு இணையாக இளம் நடிகைகளை சேர்த்துக் கொள்வார்.
தனக்கு நெருக்கமான நண்பர்கள் படம் எடுத்தால் அதன் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு முன்னின்று நடத்திக் கொடுப்பார். அப்படித்தான் பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வந்து பேசியிருப்பது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகியிருக்கிறது. வாசன் பாலா இயக்கத்தில் ஜிக்ரா என்ற படத்தில் ஆலியா பட் லீட் ரோலில் நடித்திருக்கிறார். இதன் தெலுங்கு மொழி வெளியீட்டில் ஐதராபாத்தில் சமீபத்தில்ந் நடந்தது. இந்த விழாவுக்காக நடிகை சமந்தாவை அழைத்தால் வருவாரா என்று சந்தேகப்பட்டபடி அவருக்கு போன் செய்திருக்கிறார் ஆலியா. விசயத்தைக் கேட்டதும் உடனே வருவதாக சொல்லி ஆலியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இது பற்றி ஆலியா அந்த விழாவில் பேசும்போது,
எனது அன்பிற்குரிய சமந்தா. திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள்தான் ஹீரோ. உங்களது திறமை, உங்களது வலிமை, உங்களது உடலை நீங்கள் வருத்திக் கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இவற்றை நான் பாராட்டுகின்றேன். ஒரு பெண்ணாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் இந்த ஆண்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய சமூகத்தில் பெண்ணாக வாழ்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.
சமந்தா நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்கின்றீர்கள். அதனால்தான் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றீர்கள். இதுமட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் கால்கள் மூலம் கொடுக்கும் ஒவ்வொரு உதையும் மிகவுமே முக்கியமானது. அது பலருக்கு முன்மாதிரியாக எப்போது இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன். சமந்தாவுடன் தான் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகின்றேன். இயக்குநர் த்ரிவிக்ரம் சார் நீங்கள் எங்களுக்கான கதையை உருவாக்குங்கள். நான் இதனை மேடைக்காக சொல்லவில்லை.
பொதுவாக நடிகைகள் கொஞ்சம் பொறாமையாக இருப்பதாக கூறுவார்கள். ஆனால் சமந்தா அவ்வாறு இல்லாமல், எனது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஒரு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் எனது படத்திற்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு நான் என்றைக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இந்த நிகழ்ச்சிக்காக சமந்தாவை தொடர்புகொண்டு நான் பேசியபோது, வெறும் 6.5 நொடிகளில் வருவதாக் உத்திரவாதம் அளித்தார்” இப்படி ஆலியா பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் அமர்ந்திருந்த சமந்தா கண் கலங்கி அழதே விட்டார்.