No menu items!

ஆசிய கோப்பை Finals : இந்தியா – பாகிஸ்தான் மோதலா?

ஆசிய கோப்பை Finals : இந்தியா – பாகிஸ்தான் மோதலா?


பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததைத் தொடர்ந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் சூடு பிடித்திருக்கிறது இந்த மாபெரும் வெற்றியின் விளைவாக, புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த இந்தியா கம்பீரமாக முதல் இடத்துக்கு முன்னேற, 3-வது இடத்தில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். இலங்கை அணி 2-வது இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளிலும் மழை வர வாய்ப்புகள் இருப்பதால் இனி என்ன நடக்கும்?, இறுதிப் போட்டிக்கு யார் செல்வார்கள் என்ற பதற்றம் இந்த 3 அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆசிய கிரிக்கெட் போட்டியில் இனி என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்…

இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுமா?

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் சந்தித்ததில்லை. கடந்த 40 ஆண்டு ஆசிய கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் இந்த இரண்டில் ஏதாவது ஒரு அணி லீக் சுற்றிலேயே தோற்று தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. அதனால் இந்தியா – இலங்கை அல்லது இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிதான் நடந்துள்ளன.

இந்த சூழலில் இம்முறை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் பரஸ்பரம் சந்திக்க வேண்டுமென்றால், இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி இலங்கையை வெல்ல வேண்டும். அதேபோல் 14-ம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தியாக வேண்டும்.

இந்தியாவை இலங்கை வீழ்த்தினால்?

இன்றைய போட்டியில் இந்தியாவை இலங்கை அணி தோற்கடித்தால், அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எளிதாக இருக்கும். ஆனால் அப்படி நடந்தாலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன. அதற்கு 14-ம் தேதி நடக்கும் சூப்பர் 4 பிரிவு போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை அதிக ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது அதிக ஓவர்கள் வித்தியாசத்திலோ வீழ்த்த வேண்டும் அதேநேரத்தில் இந்திய அணி வங்கதேச அணியை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் நெட் ரன் ரேட் விஷயத்தில் இலங்கை அணியை விட இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் இருக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

இலங்கையிடம் பாகிஸ்தான் தோற்றால்

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தற்போது தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரை இறுதி ஆட்டத்தைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வென்றால், அந்த அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இந்தியாவின் கையில் இருக்கும்.

இந்திய அணி அடுத்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வென்றால் எளிதாக இறுதிப் போட்டியை அடையும் அதேநேரத்தில் இந்த இரு போட்டிகளில் குறைந்த வித்தியாசத்தில் தோற்றாலும், பாகிஸ்தானைவிட அதிக ரன் ரேட் வைத்திருந்தால் நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஆக இப்போதைய சூழலில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இந்தியா – இலங்கை இடையிலான இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...