இயக்குநர் அனுராக் காஷ்யப் விரிவாக கூறும்போது, “நாங்கள் ‘சேக்ரட் கேம்ஸ்’ மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட தொடர்களை நெட்ஃபிளிக்ஸுக்காக எடுக்கும்போது அதை ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம்.
அவர்களுடன் சேர்ந்து சில நல்ல படைப்புகளை உருவாக்கினோம். பின்னர், மெதுவாக, கோவிட் காலத்தில், எல்லாம் தலைகீழாக மாறியது.
இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பது தொலைக்காட்சியை விட மோசமானது. அவர்கள் உங்களை முட்டாளாக்க விரும்புகிறார்கள்.
இந்த அனைத்து நிறுவனங்களும், அது நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசான் அல்லது ஆப்பிள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவை ‘டேட்டா’ எனும் எரிபொருள்தான்.
அவர்களுக்கு விரும்புவது எல்லாம் சந்தாவை மட்டும்தான். 1.4 பில்லியன் மக்கள்தொகையுடன், அவர்கள் தங்கள் சந்தாவை அதிகப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரையும் சென்றடைய விரும்புகிறார்கள். யாரையும் அவர்கள் புண்படுத்த விரும்பவில்லை. அவர்கள் கலை அல்லது சினிமாவை உருவாக்க விரும்பவில்லை, அவர்கள் வெறும் கன்டென்டை மட்டுமே உருவாக்குகிறார்கள்.