No menu items!

அதிமுக செயற்குழு – நடந்தது என்ன?

அதிமுக செயற்குழு – நடந்தது என்ன?

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று  நடந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை  கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தித்து வருகின்றனர். ஆனால் அதை ஏற்க எடப்பாடி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம் என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பலரும், ‘கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்ற கருத்தை பதிவு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ”சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுக கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை’ என்று உறுதியாக கூறியதாக சொல்லப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...