No menu items!

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த இயக்குனர் நவீன்

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த இயக்குனர் நவீன்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு வாக்கு சேகரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி இல்லை” என்று திமுகவினரைப் பார்த்து கூறியிருந்தார்.

இதற்கு ‘மூடர் கூடம்’, ‘கொளஞ்சி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

திரிபுரா சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 69.96% சதவீத வாக்குகள் பதிவு

இந்திய வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கில் 14 திமுக, அதிமுக அலுவலகங்களுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது திமுகவினர் 10 இடங்களிலும், அதிமுகவினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது. திமுக சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் திமுக தேர்தல் அலுவலகமும், திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அதிமுக தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் கனிமொழி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, கூட்டணி வேட்பாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கக்கூடிய ஊடகங்களை அச்சுறுத்தும் விதமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி, அவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...