இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’-ஐ வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2021-2023-ஆம் ஆண்டுவரை, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் தொற்றா நோய்களால் 56.7 சதவீதம் உயிரிழந்தனா். இது 2020-22-ஆம் ஆண்டில் (கரோனா காலம்) 55.7 சதவீதமாக இருந்தது.
தொற்று, பிரசவம், பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சாா்ந்த பிரச்னைகளால் 23.4 சதவீத மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2020-22-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்தது.
30 வயதுக்கு மேற்பட்டவா்களில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக உள்ளன.
நோய்கள் உயிரிழப்பு (%).
இதய நோய்கள்31.
சுவாச தொற்றுகள்9.3.
சுவாச பாதிப்பு நோய்கள் 5.7.
ஜீரண மண்டல நோய்கள் 5.3.
காரணம் தெரியாத காய்ச்சல்4.9.
நீரிழிவு பாதிப்பு3.5.
பிறப்புறுப்பு & சிறுநீா் மண்டல உறுப்பு நோய்கள்3.
தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் 10.5.
15-29 வயதுள்ளவா்கள் மரணம்: தற்கொலை பொதுவான காரணம்.
15 முதல் 29 வயதுள்ளவா்களின் உயிரிழப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதல்-தற்கொலை ஆகியவை மிகவும் பொதுவான காரணமாக உள்ளன. விபத்துகள் தவிர உள்நோக்கம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் பிற காயங்களால் 3.7 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் பெரும்பாலும் 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவா்களுக்கே ஏற்படுகிறது.