எத்தனை காலம் வாழப் போகிறோம் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? – அது ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை. வெறும் 2 நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்.
அது எப்படி? வெறும் இரண்டு நிமிடத்தில் எவ்வளவு நாள் வாழப்போகிறோம் என்பது தெரியும் என்று கேட்கிறீர்களா… அதற்கு ஒரு சுலபமான பரிசோதனை இருக்கிறது.. 51 வயதிலிருந்து 80 வயதுவரை உள்ள அனைவரும் இந்தப் பரிசோதனையை செய்துபார்த்து தங்கள் ஆயுளை தெரிந்துகொள்ளலாம்.
சராசரியாக, 50 வயதைக் கடந்தாலே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து வாழ்நாள் முழுவதும் நம் உடலில் தங்கிவிடுகின்றன. வாங்கும் பென்ஷன் முழுவதும் மாத்திரைகளுக்கே செலவாகிவிடுகின்றன. இதுபோதாதென்று புதிதாக ஒரு பரிசோதனையை செய்து, அதற்கும் சேர்த்து டாக்டரிடம் மருந்து வாங்கவேண்டிய நிலை ஏற்படப் போகிறது என்று பயப்படுகிறீர்களா?
அந்த பயமும் வேண்டாம்…
இந்த பரிசோதனையை செய்வதற்கு ஒரு ரூபாய் கூட நீங்கள் செலவு செய்யத் தேவையில்லை. இந்த சோதனைக்காக நீங்கள் மருத்துவமனைக்கும் செல்ல வேண்டியதில்லை. பரிசோதனைக்கு பிறகு எந்த மாத்திரைகளையும் உட்கொள்ள தேவையில்லை. அப்படிப்பட்ட இந்த பரிசோதனையின் பெயர் sit-raising test.
அமெரிக்காவில், ஒளிப்பரப்பப்பட்ட ஒரு டிவி ஷோவில் மருத்துவர் நடாலி அசார் என்பவர் sit-raising test இந்த பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த பரிசோதனை மூலம் உங்களுடைய ஆயுட்காலம் எதுவரை இருக்கும் என்பதை கண்டறிந்துவிடலாம் என்கிறார்கள்.
sit-raising test என்றால் என்னவென்று முதலில் தெரிந்துக் கொள்வோம்?
தெரிந்தோ தெரியாமலோ இந்த பரிசோதனையை சிறுவயதில் நாம் அனைவரும் விளையாட்டாக செய்து பார்த்திருப்போம்.
தரையில் உட்கார்ந்து எழுவதுதான் இந்த பரிசோதனை. ‘அட… உட்கார்ந்து எழுவதுதானே… இதைச் சாதாரணமாக செய்து முடித்துவிடலாமே…” என்கிறீர்களா?… இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. நமது கையின் உதவி இல்லாமல் எழுந்து நிற்க வேண்டும். இது ஈசிதானே என்று தோன்றும். ஆனால், செய்து பார்த்தால்தான் தெரியும் 50 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று சவாலாகத்தான் இருக்கும்.
யார் வேண்டுமாலும் இதை செய்து பார்க்கலாம். வயதானவர்கள்தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் பெரும்பாலோனோருக்கு தரையில் உட்காரும் பழக்கமே கிடையாது. அதனால் இளம் வயதினருக்கும் இது சாவாலான ஒன்றுதான்.
இந்த பரிசோதனையை செய்துவிட்டு உங்களுக்கு நீங்களே ஸ்கோர் கொடுத்துக்கொள்ளுகள். தொடங்குவதற்கு முன்பு 10 ஸ்கோர் பாயிண்ட்ஸ் வைத்துக்கொள்ளுகள். நீங்கள் தரையில் கை வைத்து கையின் உதவியுடன் எழுந்தால் பத்திலிருந்து ஒரு மதிப்பெண் குறைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்று உங்கள் கால்மீது கை வைத்து எழுந்தால் அதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைத்துக்கொள்ளுங்கள். சப்போர்ட்டிற்கு எதை பிடித்துக் கொண்டாலும் ஸ்கோர் பாயிண்ட்ஸ்யை குறைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இறுதியில், 0-3-க்கு உள்ளாகதான் உங்களுடைய ஸ்கோர் பாயிண்ட்ஸ் இருக்கிறது என்றால் ஆறு மடங்கு 8-10 ஸ்கோர் பாயிண்ட்ஸ் எடுத்தவர்களை விட இறப்பை நெருங்கிக் கொண்டுயிருக்கிறர்கள் என்று அர்த்தம்.
இந்த பரிசோதனையை செய்து ஸ்கோர் பாயிண்ட்ஸ் மிகவும் குறைவாக இருந்தால், 100 சதவீதம் நீங்கள் மிக விரைவாக இறப்பை நெருங்கி விட்டீர்கள் என்பதில்லை. ஆய்வுகளுக்கும் 100% நடக்கும் என்று சொல்லவில்லை. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு அலாரமாக இதை இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள்
Good ideal,novel one. Thanks