No menu items!

முகேஷ் அம்பானியின் மருமகள் பாசம்

முகேஷ் அம்பானியின் மருமகள் பாசம்

ஒரு சாதாரண நடன அரங்கேற்றத்தை ஆஸ்கர் விருது வழங்கும் விழாபோல் பிரம்மாண்டமாக  நடத்தியுள்ளார் முகேஷ் அம்பானி. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில்  ஆமிர் கான், ரன்வீர் சிங், சல்மான் கான் என்று பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே  குவிந்து வாழ்த்தியுள்ளது.  கூடவே ஜாகிர் கான் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும்  திரண்டுள்ளனர். இத்தனை பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்றம் நடத்தும் அதிர்ஷ்டத்தைப் பெற்ற பரத நாட்டிய கலைஞர் ராதிகா மெர்ச்சண்ட்தான் மும்பையின் இப்போதைய ஹாட்   பிரபலம்.

யார் இந்த ராதிகா மெர்சண்ட்? அவருக்காக முகேஷ் அம்பானி ஏன் இத்தனை பிரம்மாண்டமாக நடன அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.

என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்சண்ட்டின் மகள்தான் ராதிகா மெர்சண்ட். இவர்களின் குடும்பம் அம்பானி குடும்பத்துக்கு கொஞ்சம் தூரத்துச் சொந்தம்.

மும்பையில் உள்ள ஜான் கானன் படித்த இவருக்கு படிப்பைப் போலவே பரதத்தின் மீதும் ஆர்வம் அதிகம். பிற்காலத்தில்  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றாலும் பரதத்தை விடவில்லை. பாவனா தாக்கர் என்பவரிடம் 8 ஆண்டுகள் பரதநாட்டியம் பயின்றுள்ளார்.

ஒருபக்கம் படிப்பு, மற்றொரு பக்கம் பரதநாட்டியம் என்று இருந்த இவர், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளின்போது அடிக்கடி முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்தைப் பார்த்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மனைவி டினா அம்பானியும் பரதநாட்டிய கலைஞர்தான் என்பதால் இந்த காதலுக்கு நோ சொல்லவில்லை. முழு மனதுடன் இந்தக் காதலை ஆதரித்துள்ளார்.

2018-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தின்போதே இந்த காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியின்போது குடும்பத்தில் முக்கிய நபராக வளையவந்த ராதிகா, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் திருமண சடங்குகளில் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சியிலும் நடனம் ஆடியுள்ளார். இந்த திருமணத்தைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில்    ஆனந்த் – ராதிகாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக  செய்தி வெளியானது.  ஆனால் இந்த தகவலை இரு குடும்பத்தாரும் இன்னும் இறுதி செய்யவில்லை.

இந்த சூழலில்தான் தன் எதிர்கால மருமகளின் நடன அரங்கேற்றத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார் முகேஷ் அம்பானி. தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பேரனை இடுப்பில் தூக்கி வைத்தபடி விழாவுக்கு வந்தவர்களை முகேஷ் அம்பானி விழுந்து விழுந்து கவனித்தது பலரையும் ஈர்த்துள்ளது.

ராதிகா மெர்ச்சண்ட் கொடுத்துவைத்த மருமகள்தான்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...