No menu items!

ஜாஹிர் கானா? பாலாஜியா? – யார் பந்துவீச்சு பயிற்சியாளர்?

ஜாஹிர் கானா? பாலாஜியா? – யார் பந்துவீச்சு பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உதவியாளர்களாக யாரைப் போடுவது என்ற விவாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட் சமீபத்தில் அப்பதவியில் இருந்து விலகினார். அத்துடன் அவருக்கு பயிற்சியில் உதவியாளர்களாக இருந்த பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாரஸ் மம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் திலிப் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக புதிய பாயிற்சியாஅளரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு உதவியாக பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், பந்துவீச்சு ஒபயிற்சியாளராக ஆர்சிபி அணியின் முன்னாஅள் வீர்ர் வொஇஒனய் குமாரையும் நியமிக்க வேண்டுக்ம் என்று கூறியதாக ச்சொல்லப்படுகிறது.

இதில் அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க சம்மதித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பந்துவீச்சு பயிற்சியில் மட்டும் கவுதம் காம்பீரின் கருத்தை ஏற்கவில்லை. அதேபோல் பீல்டிங் பயிற்ச்சியாளராக யாரை நியமிப்பது என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது.  இதில் ஜாண்டி ரோட்ஸுக்கு பீல்டிங் பயிற்சியாஅளர் பொறுப்பு வாழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியைப் பொறுத்தவரை ஜாஹிர் கான் அல்லது தமிழக முன்னாள் வீர்ர் லட்சுமிபதி பாலாஜி ஆகிய இருவரில் யாராவது ஒருவரை பயிற்சியாளக நியமிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாக உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்ச்சாளர் ஜாஹிர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் ஆவர் மொத்தம் 282 விக்கெட்களை வீழ்த்த்யியுள்ளார். அத்துடன் 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்களையும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆஅண்டு உலக்க் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக அத்தொடரில் மொத்தம் 21 விக்கெட்களை எடுத்திருந்தார். அதனால் அவரது பெயரை பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜாஹிர் கான் இப்பதவியை ஏற்க சம்மதிக்காவிட்டால் அவருக்கு பதிலாக லட்சுமிபதி பாலாஜியை இந்த பதவிக்காக பிசிசிஐ கருத்தில் கொண்டுள்ளது. லட்சுமிபதி பாலாஜி  8 டெஸ்ட் போட்டிகலில் 27 விக்கெட்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்களையும் 5 டி20 போட்டிகளில்  10 விக்கெட்களையும் எடுத்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதிக போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சிறப்பாகா செயல்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது.

“பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜியின் பெயர்களை பி.சி.சி.ஐ ஆலோசித்து வருகிறது. வினய் குமார் பெயரில் பி.சி.சி.ஐ ஆர்வம் காட்டவில்லை” என்று ஏ.என்.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இருவரில் யாராவது ஒருவரின் பெயரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...