No menu items!

ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews

ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews

மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு படங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மலையாளப் படங்களின் மீதான மதிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

கேரளாவில் இருந்து அரபுநாட்டுக்கு பிழைக்கப்போனவன், அங்கு ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாலைவனத்தில் ஆடு மேய்க்க விடப்படுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டுவந்தான் என்பதுதான் இப்படத்தின் கதை. நிஜக்கதையை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற பெயரில் பென்யாமின் என்பவர் எழுதிய நாவல் 2008-ம் ஆண்டில் வெளியாகி 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. அந்த நாவலை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் போலன்றி இதை தமிழிலும் வெளியிட்டுள்ளதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்படத்தைப் பற்றிய சில முதல் நாள் விமர்சனங்கள்..

நடிகர் அக்ஷய் குமார்:

பிருத்விராஜ் என்னை விட சிறந்த நடிகர்.., நான் அவரிடம் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

நடிகர் சூர்யா:

உயிர் பிழைக்கும் போராட்டத்தின் கதையை சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை அனைத்தையும் சேர்த்து படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இயக்குனர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், ஏ.ஆர். ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Saravanakarthikeyan Chinnadurai:

மிகச் சுமார்.

பிரச்சனையில் சிக்கிய நாயகன் அழுது கொண்டே இருந்தால் அது காவியமாகி விடுமா என்ன! தவிர, ப்ரித்விராஜ் நடிப்பும் சிறப்பாகக் குறிக்குமளவு இல்லை.

ஆனால் ஒரு விஷயத்தில் இயக்குநர் நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்து விடுகிறார். ஆம், நாயகனோடு சேர்ந்து நாமும் எப்படா இதிலிருந்து தப்பிப்போம் எனத் தவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
Such a tiresome experience.

ராஜா நவநீதம்:

வெயில் தாங்க முடியாமல் தியேட்டருக்கு போய் சில்லனு உட்காந்திருக்கானுங்க, அங்கையும் பிரித்விராஜ் பாலைவனம் வெயில்ல கஷ்டப்படறாராம்! எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறாங்களாம்…

பிலிம் பீட்:

சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வைவர் த்ரில்லர்கள் நிறைய வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே கதை தான். பனி மலையில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து விட அங்கிருக்கும் சிலர் எப்படி தப்பித்து வருகின்றனர் என்பது தான் கதை. அதே போல இந்த கதையும் ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்ப்புடனும் வலியுடனும் ரசிகர்களை தவிக்க வைத்து விடுகிறது.

Nivinaddicts

ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். இது விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. படம் முழுக்க விறுவிறுப்பாக உள்ளது

Swayam Kumar Das

ஆடுஜீவிதம் படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. பிருத்விராஜ் நடிப்பில் மிளிர்கிறார். இயக்குனர் பிளெஸி கதையை ஆழமாக சொல்லி உள்ளார். அமலாபால் மற்றும் இதர கதாபாத்திரங்களின் நடிப்பும் அருமை. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை வெறித்தனமாக உள்ளது

Moviemaniac

பிருத்விராஜூக்கு அத்தனை அவார்டுகளையும் தூக்கிக் கொடுங்கள். நீங்கள் இந்தியாவை பெருமைடைய செய்துள்ளீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...