No menu items!

ஜெயிலர் அசல் வசூல் என்ன?

ஜெயிலர் அசல் வசூல் என்ன?

ரஜினியின் முந்தையப் படங்கள் பெரிய வசூலைக் குவிக்காத சூழலில், தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர்’ வசூலை அள்ளிக்குவித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கத்திற்கு மாறாக ஜெயிலர் வெளியானதிலிருந்து விடுமுறை நாட்களும் அடுத்தடுத்து ஒரு நாள் இடைவெளியில் வந்திருந்ததால் வசூல் மிக அதிகம் என்கிறார்கள்.

ஆகஸ்ட் பத்தாம் தேதி வியாழக்கிழமை ஜெயிலர் வெளியானது. அடுத்து வெள்ளியை அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. அடுத்து திங்களை அடுத்து செவ்வாய் கிழமையும் விடுமுறை. இதனால் ரஜினி ரசிகர்கள் இந்த ஆறு நாட்களிலும் படம் பார்க்க ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்துவிட்டனர்.

பொதுவாக படம் வெளியான அடுத்த நாள் விடுமுறை இருந்தாலும், விமர்சனங்கள் சுமார் என்று கிளம்பினால் அது வசூலைப் பாதிக்கும். ஆனால் ஜெயிலருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த ஆறு நாட்களும் வசூலில் எந்திவித பாதிப்பும் இல்லை. ஒரு படம் தொடர்ந்து ஆறு நாட்கள் வசூலில் தாக்குப்பிடிப்பது என்பது தமிழ் சினிமாவில் இது முதல் முறை என்கிறார்கள்.

ஜெயிலர் வசூலைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் 112 கோடி, கர்நாடகாவில் 43 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 45 கோடி, கேரளாவில் 33 கோடி, வட இந்தியாவில் 7 கோடி, இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் சுமார் 120 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இருப்பதாக கூறுகிறார்கள்.

அதாவது சுமார் 350 கோடிக்கும் மேல் இந்த ஆறு நாட்களில் வசூலாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் பற்றிய மீம்கள், கமெண்ட்கள் சமூக ஊடகங்களில் இன்றும் பரபரப்பான சமாச்சாரங்களாகி இருக்கின்றன. இதனால் வசூல் தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கும் என கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.


காம்ப்ரமைஸ் செய்த நயன்தாரா!

தென்னிந்தியாவின் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாரா, இங்கே மார்க்கெட் தடுமாறும் நிலையில்தான் பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இவரது முதல் பாலிவுட் படத்தில், ஜோடி ஷாரூக்கான். இதற்கு ஒரே காரணம் இயக்குநர் அட்லீ. நயன்தாராவுக்கு ஹிந்தியில் எந்தவிதமான மார்க்கெட்டும் இல்லாத போதும் கூட அட்லீயின் பரிந்துரையினால் ஷாரூக்கானும் நயன்தாராவுக்கு ஓகே சொல்லியிருந்தார்.

ஜவான் பட த்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. செப்டெம்பர் 7-ம் தேதி ஜவான் வெளியாக இருக்கிறது.

இதனால் படத்தின் ப்ரமோஷன் வேலைகளை ஜவான் படக்குழு. ஷாரூக்கான் பேட்டிகள் கொடுக்க தயாராகிவிட்டார். இங்கேதான் பிரச்சினை. பொதுவாகவே பாலிவுட் படங்கள் என்றால் அப்படத்தின் ஹீரோ ஹீரோயின் என நட்சத்திரங்கள் எல்லோருமே ஒரு குழுவாக உட்கார்ந்து அரட்டை அடித்தப்படியே பேட்டி கொடுப்பது வழக்கம். இங்கே தமிழ் சினிமாவில் இருப்பது போல், ஊடகங்கள் மீது அவர்கள் பாரபட்சம் பார்ப்பது இல்லை. நம்பர் ஒன் டிவி சேனலில் இருந்து லோக்கல் யூட்யூப் வரை பேட்டிகள் கொடுப்பார்கள்.

இதனால் ப்ரமோஷனுக்கான திட்டமிடல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் முடிந்துவிட்டால் அதன் பிறகு அந்த யூனிட் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்துவருபவர் நயன்தாரா. இங்கே அவர் அஜித் விஜய் சூர்யா விக்ரம் படங்களில் நடித்தாலும் கூட ப்ரமோஷனுக்கு எட்டிப் பார்க்க மாட்டார்.

இதுநாள் வரையில் தன்னுடைய பிடிவாதத்தை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நயனுக்கு இப்போது சிக்கல். பெரும் மார்க்கெட்டான பாலிவுட்டில் முதல் படம். ஷாரூக்கான் ஹீரோ. இதனால் என்ன செய்வது என்று யோசித்தவர், வேறு வழியில்லாமல் ப்ரமோஷன் கலந்து கொள்கிறேன் என்று காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறாராம்.

ஜவான் தமிழிலும் வெளியாக இருப்பதால், நயன்தாராவின் பேட்டி இங்கேயும் ஒரு ரவுண்ட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ரஜினி, அஜித், விஜய் என மூவரையுமே கண்டுக்கொள்ளாத நயன் ஷாரூக்கானுக்காக காம்ப்ரமைஸ் செய்திருப்பதுதான் இப்போது கோலிவுட்டில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.


20 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் மணிரத்னம் நாயகி!

1990-களில் இளசுகளாக கெத்து காட்டிய இன்றைய 40 களில் இருக்கும் முன்னாள் இளைஞர்கள் கொண்டாடிய படம் மணிரத்னத்தின் ‘இதயத்தை திருடாதே’. இந்தப் படம் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற பெயரில் வெளியானது.

இந்தப்பட த்தில் அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்டவர் கிரிஜா ஷெட்டர் [Girija Shettar]. நாகார்ஜூனுடன் இவர் அடித்த அந்த லூட்டி காட்சிகள் இன்றைக்கும் பலருக்கு மீள் கொண்டாட்டம்.

இதயத்தை திருடாதே படம் நன்றாக ஓடியதால், கிரிஜாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் கிரிஜாவிற்கு நடிப்பில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அடுத்து ஒரு படம் நடித்தார். அப்படியே எல்லாவற்றை மூட்டைக் கட்டிவிட்டு இந்தியாவை விட்டு பறந்துவிட்டார்.

ரஜினிகாந்த் தனக்கு ஜோடியாக கிரிஜா நடிக்க விரும்பினாலும் கூட, கிரிஜா அதைக்கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம்.

ஜர்னலிஸ்ட்டாக தனக்குப் பிடித்த வேலையைப் பார்க்க ஆரம்பித்த கிரிஜா 2002-ல் ஹிருதயாஞ்சலி என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். மீண்டும் காணாமல் போனார்.

இப்படிப்பட்ட கிரிஜா ஒரு வழியாக இப்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார். ஆனால் இந்த முறை கிரிஜாவின் கால்ஷீட்டை வாங்கியிருப்பது கன்னட சினிமா.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிஜா ஷெட்டர் இப்போது நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் Ibbani Tabbida Ileyali. காந்தாரா பட த்தின் மூலம் கன்னட சினிமாவை திரும்பிப் பார்க்கவைத்த ரக்‌ஷித் ஷெட்டியும், ஜிஎஸ் குப்தாவும் இணைந்து தயாரிக்கும் படமென்பதால் கிரிஜா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இதயத்தை திருடாதே கிரிஜாவை இப்போது பார்த்தால், கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இயற்கை சிலசமயங்களில் இரக்கம் காட்டுவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...