வேட்டையன் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ரஜினி அதியன் என்ற பெயரில் அதிரடியான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். கன்னியாகுமரியில் ஏழைக்குழந்தைகளுக்கு ஆசிரியரான துஷாரா விஜயன் கொலை செய்யபப்டுகிறார். ஆசிரியர்கள் போராட்டம் நாடு முழுக்க பரவுகிறது. இதனால் அரசுக்கு கொலைகாரனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தன். இதற்கு ஒரே வழி.. போலீஸ் அதிகாரியான அதியனை நியக்கிறார் கமிஷனர். ஏற்கனவே விசாரித்த அதிகாரிகளின் விசாரணைப்படி கொலையாளியை தேடுகிறார் அதியன். அவன் மறைந்திருக்கும் இடத்தை தேடிச்சென்று பிடிக்கச்செல்லும் அவர் என்கவுண்டர் செய்கிறார்.
இந்த பரபரப்பு மனித உரிமைகள் ஆணையத்திடம் சென்று சத்யதேவ் என்ற நீதியரசர் விசாரணைக்கு வருகிறார். அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
ARM (அஜயண்டே ரண்டாம் மோஷணம் – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அஜயண்டே ரண்டாம் மோஷணம் திரைப்படம் இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
கிராமம் ஒன்றில் எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார், அஜயன் (டோவினோ தாமஸ்). ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரையும் அவர் அம்மாவையும் (ரோகிணி), மரியாதையின்றி நடத்துகிறது ஊர். தாத்தா திருடன் என்பதால் நேர்மையாக வாழ ஆசைப்படும் அஜயனையும் திருடனாகவே பார்க்கிறார்கள். அஜயனுக்கு உள்ளூர் பெரிய மனிதர் மகள் லக்ஷ்மி (கீர்த்தி ஷெட்டி) மீது காதல்.
இதற்கிடையே அந்த ஊருக்கு வரும் சுதேவ் (ஹரீஷ் உத்தமன்), உள்ளூர் கோயிலில் இருக்கும் விலை மதிப்பில்லாத விளக்கு போலி என்றும் உண்மையான விளக்கை உன்னால்தான் கண்டுபிடித்துத் தரமுடியும் என்றும் மிரட்டுகிறார், அஜயனை. அதை மீட்டுத்தந்தால் காதலைச் சேர்த்து வைப்பதாகவும் திருட்டுக் குடும்பம் என்கிற அவச்சொல்லில் இருந்து குடும்பத்தை மீட்பதாக வும் சொல்கிறார். அஜயன் அந்த விளக்கை மீட்டாரா? விளக்குக்கும் அஜயனுக்கும் என்ன தொடர்பு? விலைமதிப்பில்லாத விளக்கின் பின்னணி என்ன என்பது ஏஆர்எம் (அஜயன்டே ரண்டாம் மோஷனம்) படத்தின் கதை.
Do Patti (தோ பட்டி – இந்தி) – நெட்பிளிக்ஸ்
சஷாங்க் சதுர்வேதி இயக்கத்தில் கஜோல், கீர்த்தி சனோன், ஷாஹிர் ஷேக் நடித்துள்ள தோ பட்டி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிராக வீடுகளில் நடக்கும் வன்றைகளை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. மனைவியை வீட்டில் கடுமையாக தாக்கும் குணம் கொண்ட கணவனுக்கு, மனைவியும் அவரது சகோதரியும் எப்படி தண்டனை வாக்கிக் கொடுக்கிறார்கள் ஏன்பதுதான் இந்த பட்த்தின் கதை.
சட்டம் என் கையில் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
சதிஷ் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி அதிக கவனம் ஈர்க்காத சட்டம் என் கையில் திரைப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சாலை விபத்தில் ஒரு பைக் பயணியை கொலை செய்யும் சதீஷ், அவருடைய உடலை தன் கார் டிக்கியில் போட்டு எடுத்துச் செல்கிறார். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக சதீஷை போலீஸார் கைது செய்கிறார்கள். அந்த அதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் பட்த்தின் கதை.
திரையுலகில் வெற்றி பெறாவிட்டாலும், ஓடிடியில் வெளியான பிறகு சஸ்பென்ஸ் படங்களை விரும்புபவர்கள் மனதில் சட்டம் என் கையில் இடம் பிடித்துள்ளது.