No menu items!

இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து! USA Warning

இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து! USA Warning

இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்கீழ் அதிரடி நடவடிக்கைகள் பல அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மே 27 அன்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்.

மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத, தகுதியிழக்கும் சூழலுக்கும் மேற்கண்ட மாணவர்கள் ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், விசாக்களை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச மாணவர்கள் மீதான தங்களின் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முதல் போக்குவரத்து விதிமீறல் என ஒவ்வொரு வழக்குகளுக்கும் காரணங்கள் வேறுபடுகின்றன. இவை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...